Home /News /trend /

சிவனுக்கு 10கிலோ ஐஸ்கிரீமால் நைவேத்தியம் செய்த பக்தர்..

சிவனுக்கு 10கிலோ ஐஸ்கிரீமால் நைவேத்தியம் செய்த பக்தர்..

காட்சி படம்

காட்சி படம்

சிவனுக்கு ஐஸ்கிரீமால் நைவேத்தியம் .. காண குவிந்த மக்கள்..

ஆந்திரப் பிரதேசத்தின் பாலகோலில் வசிக்கும் தீவிர சிவன் பக்தர் ஒருவர், பஞ்சராம க்ஷேத்திரங்களில் ஒன்றான க்ஷீர ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு ஐஸ்கிரீம் நைவேத்தியம் அளித்த செய்தி தற்போது அப்பகுதி மக்களிடையே தீயாய் பரவி வருகிறது. மேலும் ஐஸ்கிரீம் அலங்காரத்தில் இருந்த சிவனைக் காண திரளானோர் கோயிலுக்கு வருகை தந்தனர். பொதுவாக ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பொருள் கோயிலுக்கு வரும் அனைத்து பக்கதர்களுக்கும் வழங்கப்படும்.

ஏனெனில் கடவுளுக்கு படைக்கும் தனித்தன்மை வாய்ந்த பிரசாதத்துடன் பக்தர்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள் என்று அர்த்தம். சாதாரணமாக திருவிழாக் காலங்களில் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம் என்றாலும், இந்த குறிப்பிட்ட கோயிலுக்குச் செல்லும் மக்கள் சில சுவையான பிரசாதங்களை பெறுவதற்காகவே செல்வார்கள் என்று சொல்லலாம்.

ஏனெனில் இங்கு வரும் பக்தர்கள் பால் அல்லது தயிர் நைவேத்யத்தை இறைவனுக்கு அபிஷேகமாக வழங்குகின்றனர். இவை தவிர, சிலர் தேன், சர்க்கரை மற்றும் பலவிதமான பழச்சாறுகளை தெய்வத்திற்கு சமர்ப்பித்து பிரார்த்தனை செய்கிறார்கள். சிலர் ஒரு டம்ளர் தண்ணீரையும் அபிஷேகமாக வழங்குவார்கள். நைவேத்யத்தை நிறைவேற்றுவதன் மூலம் இறைவன் அவர்களை ஆசீர்வதிப்பார் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் அக்ககோயிலில் உள்ள தெய்வம் 'போலா சங்கரா' என்று குறிப்பிடப்படுகிறது.

also read : தள்ளாத வயதிலும் தெருவில் போண்டா விற்கும் தம்பதியினர்-வைரலாகும் வீடியோ

மேலும் சிவனை காண வரும் பக்தர்கள், தங்களுக்கு ஏற்படக்கூடிய நிதிப் பிரச்சனைகளில் இருந்து விடுபட மாரேடு இலைகளைப் பயன்படுத்தி சிறப்புப் பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள்.
ஆனால் பாலகோலைச் சேர்ந்த தேவெல்ல நரசிம்ம மூர்த்தி என்பவர், சிவபெருமானுக்கு 10 கிலோ ஐஸ்கிரீமை நைவேத்தியமாக வழங்கியதன் மூலம் அவர் தனது சொந்தப் பகுதியில் மிகவும் பிரபலமாகியுள்ளார். சிவலிங்கத்தின் மீது ஐஸ்கிரீம் ஊற்றப்பட்டு, அது தெய்வத்தை சுற்றி அமைந்திருந்ததால், பக்தர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று அந்த அற்புதமான காட்சியைப் பார்க்கச் சென்றனர்.

அதேபோல பிரசாதமாக வழங்கப்பட்ட குளிர்ந்த ஐஸ்கிரீமை சுவைக்க பகதர்கள் பலர் புகழ்பெற்ற கோவிலில் நீண்ட வரிசையில் நின்றதும் பெரிய விஷயமாக பேசப்பட்டது. பொதுவாக இக்கோயிலுக்கு வரும் சிலர் பாயசம், சக்கர பொங்கல் மற்றும் பூர்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நைவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்குகின்றனர்.

புராணங்களிலும் சரி, சரித்திரத்திலும் சரி, சிவபெருமானுக்கு என பல தீவிர பக்தர்கள் உள்ளனர். ஒரு வேட்டைக்காரனாக இருந்த ஒரு தீவிர பக்தரான கண்ணப்பாவின் புகழ்பெற்ற கதைப்படி, அவர் சிவபெருமானுக்கு இறைச்சியை எப்படி அளித்தார் என்பதும் தீவிர சிவனடியார்களுக்கு தெரியும். பொதுவாக, அனைத்து இந்து கோயில்களிலும் பிரசாதம் வழங்குவது வழக்கம். அதில் சில கோயில்களில் இதுபோன்ற சிறப்பான வித்தியாசமான பிரசாதங்களை வழங்கப்படுகின்றன.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Viral

அடுத்த செய்தி