முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Summer solstice: பூமியின் மிக நீண்ட நாள் இன்று( ஜூன் 21)

Summer solstice: பூமியின் மிக நீண்ட நாள் இன்று( ஜூன் 21)

2022 இன் நீண்ட நாள் ஜூன் 21

2022 இன் நீண்ட நாள் ஜூன் 21

longest day of 2022: பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள அனைத்து இடங்களிலும் பகல் 12 மணிநேரத்திற்கும் மேலாகவும், தெற்கே உள்ள அனைத்து இடங்களிலும் 12 மணிநேரத்திற்கும் குறைவாகவும் காண்கின்றன.

  • Last Updated :

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டும் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அந்த நீள்வட்டம் என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. சூரியனுக்கு அருகில் சிறிது காலமும், தொலைவாக சில காலமும் இருக்கும். இதனால் தான்  கோடைகாலமும், குளிர்காலமும் வருகிறது.

அதேபோல் இந்த சுழற்சியின் போது நாளின் அளவில் வித்தியாசங்களும் நடக்கும். அது தான் சம இரவு புள்ளி, சங்கராந்தி எனப்படுவது.

சங்கராந்தி என்பது ஒரு வானியல் நிகழ்வாகும். இது ஆண்டுக்கு இரண்டு முறை நிகழும். பூமியின் ஒவ்வொரு அரைகோளத்திலும் ஒரு முறை நிகழ்கிறது. ஜூன் மாதத்தில் கோடையில் நிகழ்வது கோடைகால சங்கராந்தி என்றும் டிசம்பர் மாதத்தில் குளிர்காலத்தில் நிகழ்வது குளிர்கால சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது.

மெட்டா அவதார்களுக்கென விர்ச்சுவல் ஆடைகடை- மார்க் ஜுக்கர்பெர்க்கின் புதிய அறிமுகம்!

வடதுருவத்தில் சுமார் 23.5 டிகிரி கடக ரேகை சூரியனை நோக்கி சாய்ந்திருந்தால், சூரிய கதிர்கள் அந்த ரேகையின் மேல் செங்குத்தாக நேரடியாக விழும். இந்த நேரத்தில் பூமியின் வாடா அரைக்கோளம் சூரியனை நோக்கி அதிகபட்ச சாய்வில் இருக்கும். இதன் காரணமாக வடக்கு அரைக்கோளம் சூரியனிலிருந்து அதிக ஒளியையும் வெப்பத்தையும் பெறுகின்றன.

அதிக நேரம் சூரியன் வட அரைக்கோளத்தின் மேல் இருப்பதால் அங்கு பகல் வெளிச்சம் என்பது நீண்ட நேரத்திற்கு இருக்கும். இதனால் வட அரைகோளத்தில் இருக்கும் நாடுகளில் இந்த ஆண்டின் மிக நீண்ட நாளாக இந்த நாள் தெரிகிறது.  இதன் விளைவாக, பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள அனைத்து இடங்களிலும் பகல் 12 மணிநேரத்திற்கும் மேலாகவும், தெற்கே உள்ள அனைத்து இடங்களிலும் 12 மணிநேரத்திற்கும் குறைவாகவும் காண்கின்றன.

வருடத்தில் எந்த நாளில் அதிகமான சூரிய ஒளி படுகிறதோ சூரிய உதயம் விரைவாகவும் மறைவது தாமதமாகவும் நடக்கின்றதோ அது கோடைகால சங்கராந்தி என்று அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் நீண்ட நாள் இன்று ஜூன் 21.கோடைகால சங்கராந்தியை எஸ்டிவல் சங்கராந்தி அல்லது மிட்சம்மர் என்றழைப்பர்.

சூரியனின் வருடாந்திர முன்னேற்றத்தை கணிக்கவும், சூரியனை வழிபடவும், அதன் இயக்கங்களைக் கணிக்கவும் இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹெஞ்ச் போன்ற நினைவுச்சின்னங்களை மக்கள் கட்டினார்கள். சங்கராந்தி தினத்தன்று சூரிய உதயத்தைக் காண இங்கு மக்கள் கூடுவர்.

ஜூன் மாத சங்கிராந்தியின் போது, ​​ஆண்டின் வேறு எந்த நேரத்திலும் ஒப்பிடும்போது, ​​வட துருவம் சூரியனை நோக்கி நேரடியாக சாய்ந்திருக்கும், மேலும் தென் துருவமானது சூரியனிலிருந்து நேரடியாக விலகி இருக்கும்.

கோடைகால சங்கிராந்தி நாளில் சூரியன் அடிவானத்தில் இடதுபுறமாக உதயமாகி, அதன் வலதுபுறத்தில் அஸ்தமனமாகும்.

பூமியின் தற்போதைய சுற்றுப்பாதையின் அடிப்படையில், கோடைகால சங்கிராந்தி தேதி ஜூன் 20, 21 மற்றும் 22 க்கு இடையில் நிகழ்கிறது. மேலும் இது மனித நாட்காட்டியில் அல்லாமல் நமது சூரிய குடும்பத்தின் இயற்பியலைப் பொறுத்தது என்பதால் நாடுகளின் நாட்களில் சிறிது மாறுதல்களோடு இருக்கும்.

First published:

Tags: Astronomy, Geo