புதிதாக பிறந்த குழந்தையின் தலைமுடி, நகம், முதல் பல், கை ரேகை மற்றும் கால் பாத அச்சுக்கள் ஆகியவற்றை தாய்மார்கள் சேகரித்து வைத்திருப்பதை பார்த்திருப்போம். ஏன் அந்த காலத்தில் தாய்க்கும் குழந்தைக்குமான உன்னத உறவை நினைவூட்டும் விதமாக தொப்புள் கொடியில் தாயத்து செய்து குழந்தைக்கு போட்டுவிடுவார்கள்.
அப்படி நினைவுகளை சேகரிக்கும் பட்டியலில் தற்போது தாய் பால் இணைந்துள்ளது. அதுவும் மார்டன் ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் தாய் பாலில் இருந்து நகைகள் தயாரிக்கப்படுகின்றன. லண்டனைச் சேர்ந்த சஃபியா மற்றும் ஆடம் தம்பதி மெஜந்தா ஃப்ளவர்ஸ் என்ற விருது பெற்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் உங்களுடைய வாழ்வில் நிகழும் மிகவும் முக்கியமான தருணங்களில் பயன்படுத்தப்படும் மலர்களை விலைமதிப்பற்ற நினைவு பரிசுகளாக மாற்றித்தருகின்றன. தற்போது தாய் பாலில் இருந்து நகைகளை உருவாக்கும் விதமாக தங்களது ‘மெஜந்தா ஃப்ளவர்ஸ்’ நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளனர். ‘என்னது தாய் பாலில் இருந்து நகைகளா விநோதமா? இருக்கே’ என தோன்றலாம்.
மூன்று பிள்ளைகளுக்கு தாயான சஃபியா, தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார். மேலும் அதுபற்றிய நினைவுகளை தாய்மார்கள் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தைப் புரிந்து கொண்டுள்ளார். இது தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையே ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை வழங்குவதாகவும், அந்த நேசத்துக்குரிய பிணைப்பைக் கொண்டாடுவதாகவும் சாஃபியா தெரிவித்துள்ளார்.
இதனை உலகம் முழுவதும் உள்ள தாய்மார்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை விட விலைமதிப்பற்றதாக கருதுகின்றனர். தாய் பாலில் இருந்து நகைகள் தயாரிக்கும் வழக்கம் பல மேற்கத்திய நாடுகளிலும் உண்டு. கொரோனா லாக்டவுன் காலத்தின் போது, சஃபியா படித்த கட்டுரை ஒன்று அவரை தனது தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உந்தியுள்ளது. ஆம், அவர் படித்த கட்டுரையில் தாய் பால் மூலம் நகைகள் செய்யப்படுவதை அறிந்து ஆச்சர்யம் அடைந்தார், அது பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்ட சஃபியா தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
Also Read : ஒரே பெண்ணுக்கு 21 குழந்தைகள்.. ஆனால் எல்லாமே 2 வயதுக்கு கீழே தான் - நம்ப முடிகிறதா?
ஏனென்றால் தாய் பால் எளிதில் கெட்டுப்போகக்கூடியது. அதனை நீண்ட நாட்களுக்கு நிறம் மாறாமல் பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான காரியம். இதற்காக சஃபியா பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தீர்வு கண்டுபிடித்துள்ளார். முதலில் தாய்பாலில் உள்ள திரவத்தை நீக்கிவிட்டு, அதனுடன் நிறமற்ற பிசினைக் கலந்து நகைகளை உருவாக்குகிறார். இதனால் தாய் பால் நிறம் மாறாமல் நிலைத்து நிற்க முடியும் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.
2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதலே மெஜந்தா ஃப்ளவர்ஸ் நிறுவனம் நினைவு பொருட்களை தயாரிப்பது தொடர்பாக 4 ஆயிரம் ஆர்டர்களை வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது தாய் பால் மூலம் நகைகள் தயாரிக்கும் புதிய தொழிலில் கால் பதித்துள்ள அந்நிறுவனம், 2023ம் ஆண்டுக்குள் 1.5 மில்லியன் டாலர்கள் அதாவது 1.5 கோடி வரை வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breast milk, Jewels, Trending