ஒரே இரவில் 'பிங்க்' நிறமாக மாறிய ஏரி... குழப்பத்தில் விஞ்ஞானிகள், கிராம மக்கள்...

மஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் ஏரி ஒன்று ஒரே இரவில் பிங்க் நிறமாக மாறியுள்ளது.

ஒரே இரவில் 'பிங்க்' நிறமாக மாறிய ஏரி... குழப்பத்தில் விஞ்ஞானிகள், கிராம மக்கள்...
லோனார் ஏரி
  • Share this:
மஹராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் விண்கல் பூமியை தாக்கியதில் இந்த ஏரி உருவாகி உள்ளது. லோனார் ஏரி என்று அழைக்கப்டும் இது, மும்பையில் இருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

லோனார் ஏரி சராசரியாக 1.2 கி.மீ விட்டம் கொண்டது. இந்த ஏரியிலிருந்த நீர் நிறம் மாறியிருப்பது என்ன காரணம் என்று தெரியாமல் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்களையும் குழப்பமடைய செய்துள்ளது.

பொதுவாக ஏரியின் நிறம் மாறுவது இது முதன்முறை அல்ல. ஆனால் இது மிகவும் வெளிப்படையாக நிறம் மாறி உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.


தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னமாக விளங்கும் இந்த ஏரியில் 10.5 பி.ஹெச் உப்பு தன்மை உள்ளது. மேலும் கோடைக்காலம் என்பதால் ஏரியின் நீர் இருப்பு குறைந்து உள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று லோனார் ஏரி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் கஜனன் காரத் தெரிவித்துள்ளார்.

ஏரிகளில் பாசி அதிகளவில் இருந்தால் பச்சை நிறமாக காட்சியளிக்கும். அதேபோன்று குறைந்த அளவிலான நீர் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் உப்புத்தன்மை கலப்பதால் ஏரியின் நிறம் மாற்றமடைந்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.லோனார் ஏரியின் நிறம் மாறியிருப்பது இயற்கை நிகழ்வுதானே தவிர இதில் மனிதர்களின் சதி வேலை ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். லாக்டவுனில் இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்து இந்த சூழலில் ஏரியின் நிறம் மாற்றம் யாருக்கும் பாதிப்பிருக்காது என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.









First published: June 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading