உணவுப் பிரியர்கள் எல்லா இடங்களிலும் எல்லா ஊர்களிலும் உள்ளனர். உணவுப்பிரியர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று எந்தவிதப் பாகுபாடுமின்றி எல்லா உணவுகளையும் விரும்பி சாப்பிடுவார்கள்; இரண்டாவது குறிப்பிட்ட உணவு அல்லது குறிப்பிட்ட உணவின் சுவைக்கு அடிமையாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி இந்த உணவு இந்த இடத்தில் தான் சுவையாக இருக்கும் என்று பாய்ஸ் திரைப்படத்தில் வரும் அன்னவெறி கண்ணையன் போல, பல உணவுகள் உள்ளன. ஆம்பூர் பிரியாணி, திருநெல்வேலி அல்வா என்று பிரபலமாக இருக்கும் உணவுகள் போலவே, சின்ன சின்ன ஊர்களில் பல உணவுகள் பெஞ்ச்மார்க்காக உள்ளன. மிகவும் விரும்பிச் சாப்பிடும் கச்சோரியை வாங்குவதற்காக, தான் ஓட்டி வந்த ரயிலையே நிறுத்தியுள்ளார் ஒரு ரயிலின் டிரைவர்.
பொதுவாக ரயிலை இயக்கும் பொழுது சிக்னல்களை பின்பற்றுவது மிகவும் முக்கியம். சிக்னல்களை நூலிழையில் தவற விட்டால் கூட, ரயில் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. ஆனால் அங்கீகரிக்கப்படாத இடத்தில், முன்கூட்டிய அனுமதி எதுவும் பெறாமல் அல்லது சிக்னல் பிரச்சனை ஏதும் இல்லாமல் தானாகவே ரயிலை நிறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஆல்வார் ஜன்க்ஷனுக்கு 500 மீட்டர் தொலைவில், தாவுத்பூர் ரயில் கிராஸிங்கில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. லோகோமோட்டிவ் பைலட் கச்சோரி வாங்குவதற்காக ரயிலை நிறுத்தியுள்ளார். பிவானி மதுரா பேசஞ்சர் வண்டிகள் என்ஜின்களை மாற்ற எடுத்துக்கொண்ட கால இடைவெளியில் இவர் ரயிலை நிறுத்தி கச்சோரி வாங்கியுள்ளார்.
ரயில்வே கிராசிங்கில் டிரெய்னை நிறுத்துவதற்கு முக்கிய காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால் எந்த காரணமுமின்றி திடீரென்று ஏன் ரயில் நின்றிருக்கிறது என்று கிராசிங்கின் இரண்டு பக்கமும் இருந்த பயணிகளுக்கு வியப்பாக இருந்தது. அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் ஆல்வாரின் புகழ்பெற்ற கச்கோரியை ரயில் டிரைவருக்கு கொண்டு வந்து கொடுக்கிறார்.
ரயில் டிரைவரின் இத்தகைய நடத்தையால் பயணிகள் வழக்கத்தை விட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. சாலையில் ரயில் கடப்பதற்காக காத்துக்கொண்டு இருந்த பயணிகளில் ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோவாக படம் பிடித்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ ரயில்வே அதிகாரிகள் இந்த வீடியோவைப் பற்றி ரயில்வே அதிகாரிகள் தெரிந்து கொண்ட பிறகு உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். ரயிலை ஓட்டி வந்தவர் உட்பட இதற்குக் காரணமாக இருந்த, ஐந்து ரயில்வே ஊழியர்களையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதைப் பற்றிய விசாரணையும் இப்பொழுது நடந்து வருகிறது. மேலும் இதுபோன்று அறிவிக்கப்படாத இடங்களில் ரயிலை எந்த முன்னறிவிப்பும் இன்றி நிறுத்துவது குற்றம் என்றும் கூறியுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.