காசு வேண்டாம் சாப்பிட ஏதாவது கொடுங்க...! நாதஸ்வரம் வாசித்து உதவி கேட்கும் கலைஞர்

கடவுள் உள்ளமே கருணை இல்லமே என்ற பாடலை அவர் நாதஸ்வரத்தில் இசைப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

காசு வேண்டாம் சாப்பிட ஏதாவது கொடுங்க...! நாதஸ்வரம் வாசித்து உதவி கேட்கும் கலைஞர்
வீடியோ காட்சிகள்
  • News18
  • Last Updated: May 23, 2020, 7:56 PM IST
  • Share this:
கொரோனா ஊரடங்கால் தொழில் அதள பாதாளத்தில் வீழ்ந்த நிலையில், நாதஸ்வர கலைஞர் ஒருவர் கடை கடையாகச் சென்று நாதஸ்வரம் வாசித்து உதவி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கையை அப்படியே தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது. வேலை, தொழில், வியாபாரம் என்று விழுந்த தடைகள், பசியையும், பட்டினியையும் மட்டுமே மிச்சம் வைத்துள்ளது.

60 நாட்கள் இருக்கும் பொருளாதார சிக்கல் இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று கணிக்கவும் முடியவில்லை. 2 மாதமாக கோவில்கள் அடைக்கப்பட்டன. திருமணங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை.


திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இல்லாததால் அதைச் சார்ந்த நாதஸ்வர, தவில் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், சமையல் கலைஞர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாதஸ்வர கலைஞர் ஒருவர் கடை கடையாகச் சென்று, நாதஸ்வரம் வாசித்து யாசகம் கேட்கும் வீடியோ வைரலாக பரவியுள்ளது. கடவுள் உள்ளமே கருணை இல்லமே என்ற பாடலை அவர் நாதஸ்வரத்தில் இசைப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

“காசு வேண்டாம் சாப்பிட ஏதாவது கொடுங்க” என்று கடைகளில் கேட்டு பெற்று செல்கிறார்.

இயக்குநர் மீரா கதிரவன் இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, அவரைப் பற்றிய தகவல்கள், தொடர்பு எண் கிடைத்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து முழு விவரம் தெரியவில்லை.

வீடியோவில் உள்ள நாதஸ்வரக் கலைஞர் திண்டுக்கலைச் சேர்ந்தாவர் என்று பின்னர் தெரியவந்துள்ளது, அவரது தொடர்பு எண் 97510 696556 ஆகும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading