ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நடுவுல கொஞ்சம் ஆடியை காணோம்... மழலை குரலில் தமிழ் மாதங்களை சொல்லி அசத்திய சிறுமி... கியூட் வீடியோ

நடுவுல கொஞ்சம் ஆடியை காணோம்... மழலை குரலில் தமிழ் மாதங்களை சொல்லி அசத்திய சிறுமி... கியூட் வீடியோ

மழலை குரலில் தமிழ் மாதங்கள்

மழலை குரலில் தமிழ் மாதங்கள்

ஆடி மாதத்தை கூற சிறுமி மறக்க, ஆசிரியை நியாபகப்படுத்துகிறார். உடனே சிறுமியை ஆடி மாதத்தையும் சேர்த்து கூறுகிறார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சிறுமி ஒருத்தி தனது மழலை குரலில் தமிழ் மாதங்களின் பெயர்களை சொல்லும் வீடியோவை தமிழக பள்ளிக் கல்வித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

  குழந்தைகளை என்றாலே குதூகலம் தான்.  அதிலும் அவர்கள் மழலை குரலில் பேசும் அழகை கால நேரம் பார்க்காமல் ரசித்துக்கொண்டே இருக்கலாம். இதனால்தான், திருவள்ளுவரே  “குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் ”  என்று திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார்.

  குழந்தைகளின் சேட்டைகளை போலவே, அவர்களில் மழலை பேச்சும் எப்போதும் இனிமை தருபவைதான். அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  வீடியோவில், தமிழ் மாதங்கள் பற்றி சொல்லுங்க என ஆசிரியை கேட்க சிறுமி ஒருவர், தமிழ் மாதங்கள் 12 என்று கூறி சித்திரை..வைகாசி... என ஒவ்வொரு மாதங்களின் பெயரை கூறுகிறாள். அப்போது ஆடி மாதத்தை கூற சிறுமி மறக்க, ஆசிரியை நியாபகப்படுத்துகிறார். உடனே சிறுமியை ஆடி மாதத்தையும் சேர்த்து கூறுகிறார்.

  தமிழ் மாதங்கள் 12ன் பெயரையும் சிறுமி அழகாக சொல்லி முடிக்க, ஆசிரியை அனைவரையும் கைத்தட்ட கூறுகிறார். மற்ற மாணவர்களுடன் சிறுமியை தனக்கு கைக்தட்ட வீடியோ முடிகிறது. இந்த க்யூட் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Girl Child, Viral Video