ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இளங்கன்று பயம் அறியாது ... மலைப்பாம்புடன் விளையாடும் சிறுமி - வைரல் வீடியோ

இளங்கன்று பயம் அறியாது ... மலைப்பாம்புடன் விளையாடும் சிறுமி - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இளங்கன்று பயம் அறியாது எனும் பழமொழிக்கு ஏற்ப இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இளங்கன்று பயம் அறியாது என்பது பழமொழி. காட்டில் புதிதாக பிறந்த மான் குட்டி அங்கும் இங்கும் பயமறியாது துள்ளி விளையாடும். வேட்டையாட வரும் விலங்குகள் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாது. சிங்கமும் காட்டில் நம்மை போன்று ஒன்று என்பதைத் தாண்டி சிந்திக்கவியலாது. அதுபோல இளமைத் துடிப்புள்ள இளையோர் தாங்கள் செய்யும் காரியத்தில் துணிவுடன் இறங்கிவிடுகிறார்கள். தற்போது இந்த தமிழ் மொழி பழமொழிக்கு ஏற்ப இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் மலைப்பாம்புடன் எவ்வித அச்சமும் இன்றி விளையாடி மகிழ்கின்றார். பாம்பு சிறுமியின் கால் அருகில் வந்த போதும் எவ்வித அச்சமும் கொள்ளாதது பாம்பின் தலையை வருடிக் கொடுக்கின்றார். பாம்பின் மீது படுத்துக் கொண்டு சிறுமி எவ்வித அச்சமும் இல்லாது சிறுமி விளையாடி மகிழும் வீடியோவை snake._.world எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
 
View this post on Instagram

 

A post shared by 🐍SNAKE WORLD🐍 (@snake._.world)மலைப்பாம்புடன் அந்த குழந்தை பயமின்றி விளையாடியதை கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியானவுடன் வைரலாக பரவி, இதுவரை 92,821 பார்வைகளைப் பெற்றுள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by 🐍SNAKE WORLD🐍 (@snake._.world)இதே போன்று பாம்பு ஒன்று தண்ணீர் அருந்தி தாகம் தணிக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் நாகப்பாம்பிற்கு தண்ணீரை அளிக்கும் நபர் தன்னை குளிர்விக்கவும் செய்கின்றார். இது போன்ற மற்றும் சில வீடியோக்களை snake._.world இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Viral Video