• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 2 வயதில் முதன்முறையாக தெளிவாக உலகை கண்டு ரசித்த சிறுமி - வைரல் வீடியோ!

2 வயதில் முதன்முறையாக தெளிவாக உலகை கண்டு ரசித்த சிறுமி - வைரல் வீடியோ!

உலகை கண்டு ரசித்த சிறுமி

உலகை கண்டு ரசித்த சிறுமி

சிறுமி தனது முதல் கண்ணாடியைப் பெறும்போது அவளது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பதை போல அவ்வளவு சந்தோஷத்தில் இருந்ததைக் காணலாம்.

  • Share this:
இணையத்தில் எப்படி செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் பல நெட்டிசன்களிடையே வைரலாக பரவுகிறதோ, அதேபோல குழந்தைகள் செய்யும் குட்டி குட்டி சேட்டைகளும், அன்பின் வெளிப்பாடுகளும் மிகவும் ரசிக்கத்தக்கவையாக இருக்கும். மேலும் பல குழந்தைகள் மிகத்தெளிவாக பேசும் வீடியோக்கள் பல சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் ஒரு குறுநடை போடும் குழந்தையின் கண்களில் தெரியும் தூய்மையான அப்பாவித்தனத்தையும், மகிழ்ச்சியின் பிரகாசத்தையும் காண நமக்கு காட்டாயம் இரு கண்கள் போதாது.
பிறந்ததில் இருந்து தெளிவாக எதையும் காண முடியாமல் தவித்து வந்த சிறுமிக்கு மருத்துவ உதவியுடன் வெளியுலகத்தை காண வாய்ப்பு கிடைத்ததும் அந்த சிறுமியின் முகத்தில் ஏற்பட்ட சந்தோசம் அலாதியானது.

புதிதாகப் பெற்ற ஒரு ஜோடி கண்ணாடியின் மூலம் தெளிவாக பார்க்கமுடியாத நிலையில் இருந்த சிறுமி உலகைத் தெளிவாகப் பார்த்த போது பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். தனது தாய் மற்றும் தந்தையை திரும்பி திரும்பி பார்த்து, உண்மையில் தனக்கு எல்லாம் தெரிவதை மகிழ்ச்சியோடு அனுபவித்த வீடியோ காட்டாயம் உங்களை "அடடா" என்று சொல்ல வைக்கும்.



குட் நியூஸ் மூவேமென்ட் என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், சிறுமி தனது முதல் கண்ணாடியைப் பெறும்போது அவளது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பதை போல அவ்வளவு சந்தோஷத்தில் இருந்ததைக் காணலாம். நவம்பர் 11 அன்று பகிரப்பட்டதில் இருந்து இந்த வீடியோ ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் மற்றும் 14,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.

சிறு குழந்தையின் இந்த மகிழ்ச்சிகரமான வீடியோ உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை வென்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதைப் பார்த்து அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்கள் என்பதைக் கட்டுப்படுத்த முடியாமல், பலர் தங்கள் எண்ணங்களைத் தெரிவிக்க அந்த பதிவின் கருத்து பிரிவில் தங்களது கருத்துக்களை குவித்து வருகின்றனர்.

Also read... மனிதர்களுடன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வாத்து - வைரலாகும் வீடியோ!

அந்த குழந்தையையும் அவளது நடத்தையையும் உன்னிப்பாகக் கவனித்த ஒரு ட்விட்டர் யூசர், “தன்னால் பார்க்க முடிகிறது என்பதை நம்பமுடியாமல் அவள் எப்படி கண்ணாடிகளை கழற்றி மீண்டும் அணிந்துகொள்கிறாள் என்பது மிகவும் பிடித்திருக்கிறது. பின்னர் மகிழ்ச்சி - புன்னகை - விலைமதிப்பற்றது" என பதிவிட்டுள்ளார்.

அதேபோல மற்றொரு யூசர், "அவள் மகிழ்ச்சியில் இருந்து அழுகையின் விளிம்பில் இருப்பதைக் காண முடிகிறது" என்று எழுதியிருந்தார். அதேபோல மற்றொரு ட்விட்டர் யூசர் எழுதியிருந்தாவது, "எனது முதல் கண்ணாடி எனக்கு நினைவிருக்கிறது. நான் முதன்முதலில் மரங்களில் அசையும் தனித்தனி இலைகளை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: