Home /News /trend /

ராணுவ வீரருக்கு நாட்டுப்பற்றுடன் சல்யூட் அடிக்கும் க்யூட் குழந்தைகள் - லைக்குகளை குவிக்கும் நெட்டிசன்கள்!

ராணுவ வீரருக்கு நாட்டுப்பற்றுடன் சல்யூட் அடிக்கும் க்யூட் குழந்தைகள் - லைக்குகளை குவிக்கும் நெட்டிசன்கள்!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | சமீபத்தில் ராணுவ வீரர் ஒருவருக்கு க்யூட்டான இரண்டு குழந்தைகள் சல்யூட் அடிக்கும் வீடியோ ஒன்றை மைக்ரோ- பிளாக்கிங் தளங்களில் ஒன்றான டிவிட்டரில், ஓய்வு பெற்ற மேஜர் பவன் குமார் பதிவிட்டுள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சாலையில் நின்ற சிறுவர்களைப் பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்தி சாக்லேட்டுகள் வழங்கிய ராணுவ வீரருக்கு நாட்டுப்பற்றுடன் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையோடு சல்யூட் அடிக்கும் க்யூட் குழந்தைகளின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.உலகம் முழுவதும் நடக்கும் சுவாரஸ்சிய விஷயங்களை நொடியில் கண் முன்னே வருவது தான் சோசியல் மீடியாக்கள்.

    குறிப்பாக இதில் வலம் வரக்கூடிய குழந்தைகளின் க்யூட் வீடியோக்கள், செல்ல பிராணிகள் செய்யும் சேட்டைகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகும். சமீபத்தில் ராணுவ வீரர் ஒருவருக்கு க்யூட்டான இரண்டு குழந்தைகள் சல்யூட் அடிக்கும் வீடியோ ஒன்றை மைக்ரோ- பிளாக்கிங் தளங்களில் ஒன்றான டிவிட்டரில், ஓய்வு பெற்ற மேஜர் பவன் குமார் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவான சில நாள்களிலேயே லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கவர்ந்துள்ள நிலையில், என்ன தான் இருந்தது? என நாமும் தெரிந்துக் கொள்வோம்.

    ஓய்வு பெற்ற மேஜர் பவன் குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், இரண்டு குழந்தைகள் சாலையில் ஓரத்தில் நிற்பது போன்று வீடியோ தொடங்குகிறது. பின்னர் ராணுவ வாகனம் ஒன்று குழந்தைகளின் அருகில் வந்து நின்றதும் என்ன நடக்கப் போகிறது என்ற அச்சத்துடன் குழந்தைகள் பார்க்கின்றனர். ஆனால் வாகனத்திற்குள் உள்ளே அமர்ந்திருந்த ராணுவ வீரரோ, குழந்தையை அழைக்கிறார். அதில் ஒரு குழந்தை மட்டும் அருகில் வந்தவுடன் கையில் இருந்த சாக்லேட்டுகளைக் கொடுக்கிறார். தொடர்ந்து அருகில் இருந்த குழந்தையும் அழைத்து கையில் சாக்லேட் கொடுத்தவுடன் இனம்புரியாத மகிழ்ச்சியில் குழந்தைகள் நிற்கிறார்கள். இறுதியில் ஜெய்ஹிந்த் என்று நாட்டுப்பற்றுடன் சல்யூட் அடிப்பது போன்று வீடியோ முடிவடைகிறது.

    Read More : ஆணியே இல்லாமல் 100 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மரவீடு.. தச்சுத் தொழிலின் பிரமிப்பு என நெட்டிசன்கள் பெருமிதம்! 


     

    இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பதிவான சில நாள்களிலேயே 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களுடன் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் குழந்தைகளைப் பாராட்டி தள்ளியுள்ளனர். குறிப்பாக எல்லையில் இருக்கும் குழந்தைகளுக்குத் தான் ராணுவ வீரரின் அருமைத் தெரியும் என்றும், இவர்களின் நாட்டுப்பற்று நிச்சயம் பாராட்டுதலுக்குரியது என பதிவிட்டுள்ளனர். மற்றொரு டிவிட்டர் பயனர் ஒருவர், அருமை... உங்களைப் போன்ற ராணுவ வீரர்களுக்கு குழந்தைகள் கூட நமக்கு மரியாதை தெரிவிப்பது போன்ற தருணங்கள் மிகவும் வெகுமதியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.. எனவும் அவர்களுக்கு எங்களது அன்பு மற்றும் இந்திய ராணுவத்துக்கு மரியாதை என பதிவிட்டுள்ளார்.

     



     

    மற்றொரு மற்றொரு ராணுவ வீரர், கடந்த 2019 ஆம் ஆண்டு அண்டை நாடான பூடானின் கிழக்கு சாம்ட்ராப் ஜாங்கா போயிராப்குண்டாவுக்குச் சென்றபோது, இந்த 2 அழகான குழந்தைகள் சாலையோரம் நின்று எனக்கு வணக்கம் செலுத்தியதை என் வாழ்வில் இதுவரை மறக்கவே முடியவில்லை என தெரித்தார். மேலும் இந்த சிறு வயதில் இவ்வளவு சுறுசுறுப்பு மற்றும் உடல் மொழியுடன் கம்பீரமாக அடித்த சல்யூட்களை எப்போதும் மறக்கவே முடியாது என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: India, Trending Video, Viral

    அடுத்த செய்தி