ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சஃபாரி வாகனத்தினுள் தாவிக் குதித்த சிங்கம்... வைரலாகும் வீடியோ

சஃபாரி வாகனத்தினுள் தாவிக் குதித்த சிங்கம்... வைரலாகும் வீடியோ

சிங்கம்

சிங்கம்

 வண்டியில் எரிய சிங்கம் வண்டியில் முன்னாடி அமர்ந்திருக்கும் பயணி முதல் கடைசி பயணி வரை அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் அடைய முயல்கிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  காட்டு விலங்குகள் என்றால் மனிதனை பார்த்தாலே வேட்டையாடிவிடும், கொன்றுவிடும் என்ற எண்ணத்தை மாற்றும் பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

  சமீபத்தில் சிறுவர் பூங்காவில் உள்ள  ஊஞ்சல்களை ஆட்டி யானைகள் குழந்தைகளைப் போல் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அதேபோல் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் , ஒரு சிங்கம் காட்டிற்குள் சஃபாரி சென்ற ஒரு சுற்றுலா பயணிகள் வாகனத்தில் குதித்து பார்வையாளர்களிடம் அன்பைக் காட்டுகிறது.

  வனத்தில்  சென்று கொண்டிருந்த  வண்டியில்  எங்கிருந்தோ ஓடிவந்த பெண்சிங்கம்  தாவியது. வண்டியில் ஏறிய சிங்கம்  முன்னாடி அமர்ந்திருக்கும் பயணி முதல் கடைசி பயணி வரை அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் அடைய முயல்கிறது. பயணிகளும் அந்த சிங்கத்தைக் கண்டு பயப்படுவதற்கு பதிலாக, அதை செல்லமாக தடவிகொடுக்கிறார்கள்.

  இதையும் படிச்சு பாருங்க: 5 அடி முதலையை விழுங்கிய 18 அடி மலைப்பாம்பு.. வைரல் வீடியோ!

  சிங்கம் வேட்டையாடும் விலங்கு தான் என்றாலும் இந்த சிங்கம் அந்த பயணிகள் கூட்டத்தில் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்கவில்லை.

  அந்த வீடியோவை சுற்றுலா பயணி ஒருவர் படம் பிடித்ததாக தெரிகிறது. 18 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளத்தில் 5.6 மில்லியன் பார்வைகளையும் 1.6 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

  இது Oddly Terrifying என்ற பயனரால் பகிரப்பட்டது மேலும், "புதிய வனவிலங்கு அனுபவம்" எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. வீடியோ எடுக்கப்பட்ட இடம் தெரியவில்லை.

  விலங்குகள் எல்லாம் எப்போதும் வேட்டையாடும்; அதற்கு அன்பு காட்டத் தெரியாது; அவை எல்லாம் அனிமேஷன் படங்களில் தான் சாத்தியம் என்ற கருத்துக்களை எல்லாம் உடைப்பதாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Lion, Viral Videos