இந்தியாவில் தயாரிக்கப்படும் பீடிக்கட்டு கவரில் சர்வதேச கால்பந்து வீரர் மெஸ்ஸியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அண்மையில் நடந்து முடிந்த கோபா அமெரிக்கக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரில் 4 கோல்கள் அடித்த மெஸ்ஸி, 5 கோல்கள் அடிக்க உதவியாக இருந்தமைக்காக, அவருக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டது.
Also read: மணமேடையிலேயே தூங்கிய மணமகன்... தட்டி எழுப்பும் உறவினர்கள் - வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தயாரிக்கப்படும் பீடிக்கட்டு கவரில் மெஸ்ஸியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதைக் கண்ட ஒருவர், அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்தியாவில் மெஸ்ஸி விளம்பரத் தூதராக இருக்கும் முதல் நிறுவனம் இது என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். மெஸ்ஸி பிரி என்று இந்த பீடிக்கட்டு உறையில் பெயர் எழுதப்பட்டுள்ளது.
இதையடுத்து, ட்விட்டரில் மெஸ்ஸியை நேரடியாகக் குறிப்பிட்டு, நீங்கள் இதனை விளம்பரம் செய்கிறீர்களா? என்று கேட்க ஆரம்பித்ததிலிருந்து, ’இதைப் பார்த்தால் மெஸ்ஸி கோப்பையைத் திரும்பக் கொடுத்துவிடுவார்’ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதேபோல மற்றொரு பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவின் முகம் அச்சடிக்கப்பட்டிருக்கும் பீடிக்கட்டு கவர் ஒன்றின் புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.