வேட்டையாட மட்டுமல்ல சிங்கத்திற்கு விளையாடவும் தெரியும்... வாத்துடன் சிங்கம் செய்த சேட்டைகளை நீங்களே பாருங்கள்!

வாத்துடன் சிங்கம் செய்த சேட்டைகளை நீங்களே பாருங்கள்

ஒரு சிங்கம் குளத்தின் அருகே நடந்து செல்கிறது. அப்போது, அந்த குளத்தில் நீந்திக்கொண்டிருந்த ஒரு வாத்தை அன்பாகத் தட்டிக்கொடுப்பதை போல அந்த காட்சிகள் அமைந்துள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாம் பெரும்பாலும் சிங்கங்கள் மற்றும் புலிகளை வேட்டையாடும் ஒரு ஆபத்தான மிருகமாகவே பார்த்திருக்கிறோம். ஏனெனில் எப்போதும் அவை வேட்டையில் ஈடுபடும் மூர்க்கமான விலங்குகள் ஆகும். இருப்பினும், சமீபத்தில் இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ சிங்கங்கள் மேல் இருக்கும் நமது கருத்தை சற்றே மாற்றியுள்ளன.

அதிகாரி நந்தா பகிர்ந்த அந்த அபிமான வீடியோ கிளிப்பில், ஒரு சிங்கம் குளத்தின் அருகே நடந்து செல்கிறது. அப்போது, அந்த குளத்தில் நீந்திக்கொண்டிருந்த ஒரு வாத்தை அன்பாகத் தட்டிக்கொடுப்பதை போல அந்த காட்சிகள் அமைந்துள்ளன. தோற்றத்தை வைத்து பார்க்கும் போது சிங்கம் முரட்டு தனமாக தெரிந்தாலும், சிறிய பறவைக்கு உதவ முயற்சிப்பது போல தோன்றும் அந்த காட்சிகள் காண்போரின் நெஞ்சை உருக வைக்கிறது.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இந்திய வன சேவை அதிகாரி, "சிங்கம் ஒரு காட்டு விலங்கு ஆனால் இயற்கையில் காட்டுமிராண்டித்தனமானவர் அல்ல" என்று கேப்ஷன் செய்துள்ளார். சிங்கம், புலி போன்ற பெரிய பூனைகள் உயிர் பிழைக்க மட்டுமே மற்ற விலங்கினங்களை கொல்கிறது மற்றும் தூண்டப்படும் போது தாக்குகிறது என்று மேலும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த குறுகிய அன்பும் மற்றும் கவனிப்பு நிறைந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ நெட்டிசன்களிடமிருந்து பலவிதமான கருத்துக்களை பெற்று வருகின்றன. சிலர் அந்த அதிகாரியின் உணர்வுகளை எதிரொலித்த அதே சமயத்தில், பலர் வாத்தை வேட்டையாடவே அந்த சிங்கம் அவ்வாறு செய்தது என்றும், ஒருவேளை சிங்கம் வாத்தை பிடித்திருந்தால் காட்டாயம் அதனை சாப்பிட்டிருக்கும் என்றும் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் மற்றொரு ட்விட்டர் யூசர் பதிவிட்டிருந்ததாவது, “இதை காண்பதற்கு அழகாக இருக்கிறது. ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை! இருப்பினும் சிங்கம் தனது பெரிய பாதங்களால் வாத்தை வருடும் காட்சிகளை நான் நேசிக்கிறேன். " என பதிவிட்டுள்ளார்.இதற்கிடையில், விலங்குகளுக்கிடையேயான அன்பைக் காட்டும் மற்றொரு இதயத்தைத் உருக வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ கிளிப்பில், ஒரு அழகான சிறிய கருப்பு நாய்க்குட்டியை அறிமுகப்படுத்திய பிறகு ஒரு வெள்ளை கிளி ‘ஐ லவ் யூ’ என்று சொல்வதைக் காணலாம்.

Also read... சாப்பிடுவதற்காக ஸ்லேட் பென்சிலை விற்பனை செய்யும் அமேசான்... இப்படியெல்லாமா விப்பாங்க!

பறவை தனது புதிய நண்பரை தனது காலால் எவ்வளவு அன்பாக தடவி கொடுத்தது என்பதையும் அந்த வீடியோ பதிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பதிவில், பெரும்பாலான மக்களின் இதயத்தை அன்பால் நிரப்பியுள்ளது. இந்த குறுகிய வீடியோ கிளிப் ஏற்கனவே டிக்டாக்கில் 12.5 மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது. இதேபோல, சமீபத்தில் ஒரு கிளி ஒன்று தனது உரிமையாளரிடம் கோபத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: