Video | கிர் காடுகளில் புற்களை மேயும் சிங்கம் - சைவ சிங்கம் என்று நெட்டிசன்கள் கிண்டல்

news18
Updated: August 30, 2019, 8:07 AM IST
Video | கிர் காடுகளில் புற்களை மேயும் சிங்கம் - சைவ சிங்கம் என்று நெட்டிசன்கள் கிண்டல்
புல் சாப்பிடும் சிங்கம்
news18
Updated: August 30, 2019, 8:07 AM IST
குஜராத்தில் சிங்கம் ஒன்று புற்களை சாப்பிடும் வீடியோ கிண்டலான கருத்துக்களுடன் வைரலாக பரவி வருகின்றன.

குஜராத்தின் கிர் காடுகளில் அதிகளவில் சிங்கங்கள் வசித்து வருகின்றன. அம்ரிலி மாவட்டத்தில் உள்ள கம்பா வனப்பகுதியில் சிங்கம் ஒன்று, அடர்ந்த புல்வெளியில் நடந்து சென்று, அந்த புற்களை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

”வனத்தில் உள்ள அனைத்து வகையான பூனை இனங்களும் புற்களை சாப்பிடும். இது வழக்கத்திற்கு மாறானது அல்ல. பூனை இனத்தை சேர்ந்த விலங்குகள் மாமிசம் சாப்பிடுவதால் அதன் ஜீரண மண்டலத்தில் அசிடிட்டி ஏற்பட்டு வயிறு பாதிக்கப்படும். அவ்வாறு ஏற்படும் போது ஒவ்வாத உணவை வாந்தி எடுத்து, வெளியேற்றுவதற்காக, இத்தகைய பச்சை புற்களை சாப்பிடும்” என்று வனத்துறை அதிகாரி கூறியுள்ளார்.




Loading...



உணவு பாதையில் சில பிரச்னைகளை உணர்ந்தால், அதை தாங்களே சரி செய்து கொள்ள, இத்தகைய முறைகளை விலங்குகள் கையாளுகின்றன என்று கூறப்படுகிறது. எனினும், இந்த வீடியோவை பகிர்ந்த சிலர், சைவ சிங்கமாக இருக்குமோ? என்று கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...