இணையத்தை கலக்கும் 3 வயது லிட்டில் மாஸ்டர் செஃப் - வைரலாகும் சமையல் வீடியோக்கள்!

லிட்டில் செஃப் இல்லிரியன் காமராஜ்

3 வயதே நிரம்பிய குழந்தை ஒன்று தனது சமையல் வீடியோக்களால் ஆன்லைனில் மில்லியன் கணக்கான இதயங்களை வென்று வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
3 வயதே நிரம்பிய குழந்தை ஒன்று தனது சமையல் வீடியோக்களால் ஆன்லைனில் மில்லியன் கணக்கான இதயங்களை வென்று வருகிறார். நியூயார்க்கில் உள்ள கிரேட் நெக் நகரைச் சேர்ந்த லிட்டில் செஃப் இல்லிரியன் காமராஜ் தனது தாய் டொரெண்டினாவுடன் சேர்த்து 1 வயதிலிருந்தே சமைத்து வருகிறார். வறுத்த உருளைக்கிழங்கு, பிஃலெட் மிக்னான், ரேக் ஆப் லேம்ப், வறுத்த கோழி மற்றும் பீஃப் வெலிங்டன் போன்ற பல புதிய உணவுகளை இல்லிரியன் தயாரிப்பது போன்ற அபிமான சமையல் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. குழந்தையின் இன்ஸ்டா கணக்கு ‘செஃப் இல்லிரியன்’ என்ற பெயரில் உள்ளது.

இது குறித்து அவரது தாயார் பகிர்ந்து கொண்டதாவது, இல்லிரியன் கப்கேக் போன்ற எளிதான விஷயங்களை முதலில் செய்யத் தொடங்கினான். பின்னர் வறுத்த கோழியை முயற்சி செய்தான். குறுநடை போடும் தனது குழந்தைக்கு விருப்பமான யூடியூப் சேனல் பிளிப்பியில் (Blippi) ஒரு வீடியோவைப் பார்த்தபின் பேக்கிங் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். அந்த யூடியூப் வீடியோவில் லியோர் தி பேக்கர் தனது பார்வையாளர்களுக்கு ரொட்டி மற்றும் பேஸ்ட்ரிகளை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை நன்கு விளக்கியிருப்பார். அதனை பார்த்ததில் இருந்து சமையலில் இல்லிரியனுக்கு ஆர்வம் அதிகரித்தது.

மேலும் குழந்தை இதுவரை வறுத்த கோழியை நான்கு முறை செய்துள்ளதாக அவரது தாயார் கூறியுள்ளார். ஊரடங்கு காலத்தின் போது இல்லிரியன் தன்னை மகிழ்ச்சியாகவும், பொழுதுபோக்காகவும் வைத்துக்கொள்ள சமைக்க தொடங்கினான் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், தாய்-மகன் இரட்டையர் பேக்கிங் கப்கேக்கின் வீடியோக்களை ஆன்லைனில் பகிர்ந்து கொள்ள டோரெண்டினா முடிவு செய்த பிறகு தான் அவர்கள் அதிகம் சமைக்கத் தொடங்கியுள்ளனர்.

அவரது நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவரின் சமையலுக்கும் தனித்தனி இணைய கணக்குகளை பதிவு செய்யுமாறு பரிந்துரைத்தனர். அதுவே இன்ஸ்டாகிராமில் illIllirian_cooks-க்கு வழிவகுத்தது, தற்போது குழந்தையின் இன்ஸ்டா பக்கத்தை 50,000க்கும் மேற்பட்ட பின் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல, தனது தாயின் கணக்கை டிக்டோக்கில் 50,000க்கும் மேற்பட்டோர் பின்தொடருகின்றனர்.

Also read... கனவை நிறைவேற்ற வயதெல்லாம் ஒரு தடையா? இன்ஸ்டாவை கலக்கும் 62 வயது டான்ஸ் பாட்டி!

அபிமான லிட்டில் மாஸ்டர்செஃப்பின் சமையல் வீடியோக்களை கீழ்காணும் லிங்கில் பார்க்கலாம்: 
View this post on Instagram

 

A post shared by Chef Ilirian Kameraj (@ilirian_cooks)


டோரெண்டினா தனது மகனை எப்போதும் கத்தியைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அவரது பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்கிறார். அவர் ஏதேனும் காய்கறிகளை நறுக்கும் பட்சத்தில் சாப்பிங் இயந்திரம் அல்லது பிற கருவிகளைப் பயன்படுத்த அனுமதிப்பதாக கூறியுள்ளார். சாப்பிங் இயந்திரத்தை பயன்படுவதை என் மகன் எப்போதும் விரும்புகிறார். எனவே என்னால் அதைத் தொட முடியாது.

ஏனெனில் எனது மகன் அதனை சமையலறையில் பார்த்தால், உடனடியாக எடுத்துக் கொள்வான் என்று குழந்தையின் தாய் டோரெண்டினா கூறியுள்ளார். குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்யும் திறன் கொண்டவர்கள். ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முயற்சி செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்று குழந்தையின் தாய் கூறியுள்ளார். மேலும் பிரிட்டிஷ் செஃப் கோர்டன் ராம்சேயின் (Gordon Ramsay) கவனத்தை ஈர்க்கும் வகையில் சமீபகாலமாக தனது பல வீடியோக்களில் ராம்சேயின் சமையல் குறிப்புகளை இல்லிரியன் பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: