ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தீபாவளிக்கு பரிசாக இந்தாண்டும் சோன்பப்டியா? நெட்டிசன்களிடம் வைரலாகும் சோன்பப்டி குறித்த பதிவு

தீபாவளிக்கு பரிசாக இந்தாண்டும் சோன்பப்டியா? நெட்டிசன்களிடம் வைரலாகும் சோன்பப்டி குறித்த பதிவு

சோன்பப்டி

சோன்பப்டி

Diwali Gift | ஒருதரப்பினர் சோன்பப்டி இனிப்பின் மீது அதிக காதலுடனும், மற்றொரு தரப்பினர் வெறுப்பில் இருந்தாலும், மக்களிடமிருந்து இந்த சோன்பப்டியைப் பிரிக்க முடியாது என்றே கூறலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. தீப ஒளித்திருநாளில் லட்சுமி தேவியை அதிகாலையில் வழிபட்டு புத்தாடை உடுத்தி, இனிப்புகளை பரிமாறினால் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். இதோடு மனதிற்கு ஒரு விதமாக உற்சாகத்தையும் நமக்கு அளிக்கும் வகையில் அமைகிறது தீபாவளி திருநாள். புத்தாடைகள், இனிப்புகளோடு விண்ணை முட்டும் சத்தத்தில் பட்டாசுகள் காதுகளை துளைத்தெடுக்கும். இப்படி சற்றும் உற்சாகம் குறையாமல் அனைவரும் கொண்டாடும் தீபாவளிக்கு பண்டிகைக்கு இன்னும் 4 நாள்கள் தான் உள்ள நிலையில், இணையத்தில் இதுகுறித்த பதிவுகள் வைரலாகிறது.

  தீபாவளி என்றாலே இனிப்புகளுக்கு பஞ்சமே இருக்காது. இப்பொழுது இருந்தே என்னென்ன பலகாரங்கள் மற்றும் இனிப்பு வகைகளை செய்யலாம் என இணையத்தை தேட ஆரம்பித்திருப்பார்கள் இல்லத்தரசிகள். இவ்வாறு என்ன தான்? விதவிதமாக இனிப்புகளை செய்திருந்தாலும் தீபாவளியையும், சோன்பப்டியும் யாராலும் பிரிக்க முடியாது.

  நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அலுவலகம் என அனைத்து இடங்களிலும் இனிப்புகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றால் தேர்வு செய்வது மஞ்சள் நிறத்தில் கண்களைக் கவரும் சோன்பப்டி தான். உளுந்து மாவு, சர்க்கரை, தண்ணீர் மற்றும் பால் போன்ற பொருட்களுடன் தயாரிக்கப்படும் இந்த சோன்பப்டியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இனிப்பின் சுவையை அதிகமாக இருப்பதால் பலருக்கும் இந்த சுவை அந்தளவிற்கு பிடிப்பதில்லை.

  Read More: நோயாளியை பிடித்து கொடுத்தால் ₹50,000 சன்மானம்; மருத்துவமனையின் தீபாவளி சலுகைக்கு குவியும் பாராட்டு

  ஒருதரப்பினர் சோன்பப்டி இனிப்பின் மீது அதிக காதலுடனும், மற்றொரு தரப்பினர் வெறுப்பில் இருந்தாலும், மக்களிடமிருந்து இந்த சோன்பப்டியைப் பிரிக்க முடியாது என்றே கூறலாம். இதுபோன்ற சூழலில் தான் தற்போது டிவிட்டரில் சோன்பப்டி குறித்த மீம்ஸ்களும், புகைப்படங்களும் வைரலாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அப்படி என்ன தான் நெட்டிசன்கள் சோன்பப்டியை வைத்து இணையத்தில் விவாதித்து வருகின்றனர் என்பது குறித்து இங்கே நாமும் அறிந்து கொள்வோம்…

  சோன்பப்டியும். டிவிட்டர் மீம்ஸ்களும்…

  தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில், அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் தீபாவளி பரிசுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் பெரும்பாலான இனிப்பு பலகாரங்கள் சோன்பப்டி மட்டும் தான். இப்படி மஞ்சள் நிற பெட்டியை அதாவது சோன்பப்டியை பரிசாக பெற்ற யூசர், பரிசாக பெற்ற இனிப்பு புகைப்படத்தோடு, “தீபாவளி பரிசுகள் வேடிக்கையாக உள்ளது“ என ட்விட் செய்துள்ளார்.

  மற்றொரு யூசர் ஒருவர், சோன்பப்டி வெறும் இனிப்பு அல்ல, அது ஒரு உணர்வு என்றும் உங்களுக்கு இந்த தீபாவளிக்கு எத்தனை சோன் பப்டி பெட்டிகள் கிடைத்துள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு பயனர் ஒருவர், அக்டோபர் மாதத்தில் எப்போதுமே சோன்பப்டி தயாரிக்கும் பணி முதலிடத்தில் உள்ளது என்றும் எனக்கு சோன்பப்டி பிடிக்கும் என்றும் உங்களது வீடுகளுக்கு எத்தனை அனுப்ப வேண்டும்? என்று கேட்டுள்ளனர்.

  மேலும் மற்றொரு யூசர் ஒருவர், பல தொழிலாளர்கள் வரிசையில் நிற்பது போன்ற புகைப்படத்தோடு, தீபாவளி பண்டிகைக்காக சோன்பப்டி வாங்க காத்திருக்கின்றனர் எனவும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

  Read More: உங்கள் காதலில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் – இந்த ஆப்டிகல் இல்யூஷன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

  நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தீபாவளியன்று சோன் பாப்டி நிச்சயமாக உங்கள் வீடுகளுக்கு செல்லும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Trending News, Viral News