Home /News /trend /

பாசத்தின் உச்சம்: கொட்டும் மழையில் குடையாய் மாறி தனது குட்டியை காக்கும் தாய் யானை!

பாசத்தின் உச்சம்: கொட்டும் மழையில் குடையாய் மாறி தனது குட்டியை காக்கும் தாய் யானை!

குட்டியை காக்கும் தாய் யானை

குட்டியை காக்கும் தாய் யானை

Viral Video : யானைகள் பிறந்து 2 ஆண்டுகள் வரை தனது தாயின் அரவணைப்பில் தான் இருக்குமாம். 16 ஆண்டுகளுக்கு பிறகு தான் விட்டு செல்லும் என கூறப்படுகிறது.

    நீலகிரி வனப்பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழையில் இருந்து தனது குட்டியை தன்னுள் அரவணைத்து குடையாய் மாறி நடந்து செல்லும் தாய் யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அம்மா என்றாலே அன்பின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும். எத்தனை சேட்டைகள் செய்தாலும், அடம் பிடித்தாலும் தன் அன்பால் அத்தனையும் கட்டிப்போட்டு அரவணைக்கும் ஒரு பிறவி என்றால் அது அம்மா மட்டும் தான். மனித பிறவிகளுக்கு மட்டுமில்லை எல்லா ஜூவராசிகளுக்கும் இது உரித்தான ஒன்று தான். தனக்கு எதுவும் இல்லையென்றாலும் பரவாயில்லை. தன் குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

    அப்படியொரு நெகிழ்வான நிகழ்வு ஒன்று தான் நீலகிரி வனப்பகுதியில் அரங்கேறியதோடு, இணையத்தையும் கலக்கி வருகிறது. அப்படி என்ன சுவாரஸ்யம் என கேட்கிறீர்களா? கொட்டித்தீர்க்கும் கனமழையில் தனது குட்டியைக் காக்கும் தாய் யானையில் பாசம் தான்.. அப்படி என்ன செய்தது தெரியுமா?

    பொதுவாக யானைகள் என்றாலே பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பதோடு அருகில் செல்வதற்கே அச்ச உணர்வு தான் ஏற்படும். அது ஒருபுறம் இருந்தாலும் யானைகள் சமூக உணர்வு மற்றும் குடும்ப உறவுகளுடன் பாசத்தோடு இருக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். தனக்கோ அல்லது தனது உறவுகளுக்கோ யாரும் தொல்லைக்கொடுத்தால் அவர்களை ஒருவழி செய்துவிடும் குணமும் யானைக்கு இருக்கிறது.

     



    குறிப்பாக யானைகள் பிறந்து 2 ஆண்டுகள் வரை தனது தாயின் அரவணைப்பில் தான் இருக்குமாம். 16 ஆண்டுகளுக்கு பிறகு தான் விட்டு செல்லும் என கூறப்படுகிறது. அந்த நாள்களில் உணவு போன்ற அனைத்து விஷயங்களுக்கும் அம்மாவை சார்ந்திருக்கும் குட்டிக்கு எதுவும் நிகழ்ந்து விடாமல் பாதுகாக்கும் குணம் யானைகளுக்கு உள்ளது என பலரும் சொல்வதை கேட்டிருப்போம். இந்நிலையில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு குறித்த காணொளி காட்சி ஒன்றைத்தான் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அந்த வீடியோ நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் எடுக்கப்பட்டதாக இருந்தது. நீலகிரி மலைப்பகுதிக்குள் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் தான் வனத்திற்குள் தாய் யானை தனது குட்டியுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தது. மழையில் நனைந்தால் தனது குட்டிக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விடுமோ? என்ற அச்சத்தில் குட்டியை தனது வயிற்றுக்கு அடியில் வரவழைத்து மனையில் நனையாமல் பெரிய குடையாய் மாறி பாதுகாத்து நடந்து சென்றது. சுமார் 52 விநாடிகள் கொண்ட வீடியோ என்றாலும் காண்போரை நெகிழ செய்யும் வகையில் தான் அமைந்திருந்தது.

    ALSO READ | போட்டிக்கு நீங்களும் வரலாம்..! 8 கிலோ சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.51,000 பரிசு

    இந்த வீடியோவைப் பதிவிட்டதோடு, ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு, இந்த யானை மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது எனவும் டிவிட் செய்திருந்தார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள், மனித இனம் மட்டுமில்லை, விலங்குகளும் தனது குழந்தைகளை பாசத்துடன் கவனித்து கொள்கிறது. இதோடு எப்படி தனது உறவுகளோடு பாசத்தோடும், அன்போடும் இருக்க வேண்டும் என கற்றுக்கொடுக்கிறது எனவும் ஒரு நபர் பதிவிட்டிருந்தார்.

    மற்றொரு ட்விட்டர் யூசர் ஒருவர், “இது அன்பின் உண்மையான வெளிப்பாடு என்றும் தாய் குழந்தைகள் மீது வைத்துள்ள உண்மையான அன்பை யாராலும் பிரிக்க முடியாது எனவும், "இரு அன்பின் பரிசு" என்று கருத்துக்களை தெரிவித்ததோடு இந்த வீடியோ பகிர்ந்தமைக்கு நன்றிகள் என கூறியுள்ளார். மேலும் பாசம் உச்சம் என இணையவாசிகள் நெகிழ்வான கருத்துக்களையெல்லாம் ட்விட் செய்து வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Trending, Viral

    அடுத்த செய்தி