Home /News /trend /

மெக்காவில் கிளாக் டவரை தாக்கிய சக்தி வாய்ந்த மின்னல்.. அடுத்து நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ

மெக்காவில் கிளாக் டவரை தாக்கிய சக்தி வாய்ந்த மின்னல்.. அடுத்து நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ

மெக்காவில் கிளாக் டவரை தாக்கிய சக்தி வாய்ந்த மின்னல்.

மெக்காவில் கிளாக் டவரை தாக்கிய சக்தி வாய்ந்த மின்னல்.

சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள கடிகார கோபுரத்தை (clock tower) மின்னல் தாக்கிய பயங்கர வீடியோ ஒன்று காண்போரை ஒருகணம் திடுக்கிட வைத்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Viralimalai, India
    சமீப நாட்களாக இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சவுதி அரேபியாவின் சில பகுதிகள் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழை உள்ளிட்ட கடுமையான வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள கடிகார கோபுரத்தை (clock tower) மின்னல் தாக்கிய பயங்கர வீடியோ ஒன்று காண்போரை ஒருகணம் திடுக்கிட வைத்துள்ளது. மெக்காவில் உள்ள கடிகார கோபுரத்தில் மின்னல் தாக்கிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவி வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் ஓஹியோவில் ஒரு மரத்தை மின்னல் தாக்கி சேதப்படுத்திய படங்கள் இணையத்தின் கவனத்தை ஈர்த்த சில நாட்களுக்குப் பிறகு மெக்காவில் இருந்து இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

    குறிப்பிட்ட அந்த வீடியோவில் மழை பெய்யும் இரவு நேரத்தில் மெக்காவில் உள்ள கடிகார கோபுரத்தில் மின்னல் தாக்குவது பதிவாகியுள்ளது. இந்த மின்னல் தாக்குதலுக்கு பிறகு வானம் கண்கவர் முறையில் ஒளிருவதையும் வைரல் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.  இந்த வைரல் வீடியோவை ஷேர் செய்துள்ள யூஸரான Mulham H தனது ட்விட்டர் அக்கவுண்ட்டின் பயோவில் ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் பல்கலைக்கழகத்தில் வானியல் அறிஞராக பணியாற்றுவதாக குறிப்பிட்டு உள்ளார்.

    Also Read : செயின் இல்லாமல் ஓடும் சைக்கிள்... மாற்று ஸ்டைலில் கலக்கும் இளைஞரின் வீடியோ வைரல்

    இவர் ஷேர் செய்துள்ள இந்த 5 வினாடி வைரல் வீடியோ மெக்காவின் இரவு மழை நேர வானத்தை வெளிப்படுத்துகிறது. திடீரென்று, வானத்தில் ஒரு பெரிய மின்னல் வெட்டி, மக்கா நகரின் மையத்தில் இருக்கும் உயரமான ஒரு கடிகார கோபுரத்தின் உச்சியை தாக்கியது. தொடர்ந்து வானமெங்கும் ஒளியூட்டப்பட்டதால், மெல்லிய மின்னல் அதன் கிளைகளை நீட்டுவது போல் காட்சி பதிவாகி இருக்கிறது. இது ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும் அதே நேரத்தில் பார்க்க மிரட்சியையும் ஏற்படுத்துகிறது. வைரலாகி வரும் அற்புதமான வீடியோ கிளிப்பை கீழே பாருங்கள்...



    சமீபத்தில் ஷேர் செய்யப்பட்ட இந்த வீடியோ, ட்விட்டரில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை குவித்துள்ளது. மேலும் இந்த பயங்கர வீடியோ இதுவரை 9,000-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. பல ட்விட்டர் யூஸர்கள் அழகான காட்சியைக் கண்டு வியந்து அதை ரீட்வீட் செய்தனர். ஒரு நியூரானுடன் மின்னலின் இந்த அற்புதமான ஒற்றுமை என்னைக் கவர்ந்தது என்று ஒரு யூஸர் கமெண்ட் செய்துள்ளார்.

    மேலும் பல ட்விட்டர் யூஸர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து தாங்கள் எவ்வளவு அற்புதமான காட்சியைக் கண்டோம் என்று தொடர்ந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இருப்பினும் மெக்கா நகர கடிகார கோபுரத்தை மின்னல் பாதிக்காது என்பதை நிரூபிக்கும் வீடியோவின் ஸ்லோ-மோஷன் பதிப்பு சில யூஸர்களால் ஷேர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி