பறக்கும் விமானத்தை நேரடியாகத் தாக்கும் மின்னல்... வைரல் வீடியோ!

பிரிட்டனில் உள்ள ப்ரிம்மிங்ஹாம் விமான நிலையத்திலிருந்து டப்ளின் நோக்கி விமானம் ஒன்று கிளம்பியது.

பறக்கும் விமானத்தை நேரடியாகத் தாக்கும் மின்னல்... வைரல் வீடியோ!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: February 11, 2020, 4:32 PM IST
  • Share this:
பறந்து கொண்டிருக்கும் விமானம் ஒன்றை மின்னல் கீற்று தாக்கும் வீடியோ காட்சி சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.

பிரிட்டனில் உள்ள ப்ரிம்மிங்ஹாம் விமான நிலையத்திலிருந்து டப்ளின் நோக்கி விமானம் ஒன்று கிளம்பியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விமானம் மாலை நேரத்தில் கிளம்பும் சூழலில் பலத்த இடி, மின்னல் காணப்பட்டுள்ளது. திடீரென மின்னல் கீற்று ஒன்று அந்த விமானத்தைத் தாக்கியுள்ளது.

விமான நிலையம் அருகே வசித்த மக்கள் இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் இதுபோன்று விமானம் ஒன்று மின்னல் கீற்றால் தாக்கப்பட்டதாகவும் அதுதொடர்பான தகவல்கள் என்ன? என்பது போன்றும் மக்கள் பதிவு செய்யத் தொடங்கினர்.


அதன் பின்னர் ப்ரிம்மிங்ஹாம் விமான நிலையம் மக்களின் சந்தேகம் மற்றும் பயத்தை தீர்த்து வைத்துள்ளது. மின்னல் தாக்கப்பட்ட விமானம் இதுபோன்ற வானிலை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறுதான் வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் விமானம் பாதுகாப்பாகவே தனது பயணத்தை மேற்கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பார்க்க: இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஜியோமியின் ரெட்மிபுக் 13 லேப்டாப்!
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்