ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஒளி மாசால் ஆபத்துக்குள்ளாகும் பறவைகள்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்.!

ஒளி மாசால் ஆபத்துக்குள்ளாகும் பறவைகள்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்.!

புலம் பெயரும் பறவை

புலம் பெயரும் பறவை

Light Pollution - Migrating Birds | சமீபத்தில் மெக்சிகோ வளைகுடா பகுதியில் 165 வகையான இரவு நேர பறவைகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இரவில் இடம்பெயர்ந்து நகரின் விளக்குகளால் ஈர்க்கப்படும் பறவைகள் நச்சு ரசாயனங்களால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெளிச்சம் மனிதர்கள் வாழ்வில் பல வகையான நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் தற்போது அதன் பயன்பாடு அதிகரிக்க, அதிகரிக்க இன்று நமக்கு மட்டுமின்றி பறவைகளுக்கும் ஆபத்தாக மாறிவருகிறது. சமீபத்தில் மெக்சிகோ வளைகுடா பகுதியில் 165 வகையான இரவு நேர பறவைகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இரவில் இடம்பெயர்ந்து நகரின் விளக்குகளால் ஈர்க்கப்படும் பறவைகள் நச்சு ரசாயனங்களால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

திசை மாறுதல், மோதல்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழிவு போன்ற பல ஆபத்துக்களை இடம் பெயரும் பறவைகள் சந்திக்க வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் இடம் பெயரும் பறவைகள் நீண்ட காலமாக ஒளி மாசால் பாதிக்கப்பட்டு வந்தாலும், தற்போது விளக்குகளில் இருந்து வெளியாகும் நச்சு ரசாயனங்கள் பறவைகளை பெருமளவில் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

குளோபல் சேஞ்ச் பயாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இரவில் செயற்கை ஒளியால் ஈர்க்கப்படும் பறவைகள் காற்றில் உள்ள நச்சு இரசாயனங்கள் அதிக அளவில் வெளிப்படும் பகுதிகளுக்கு இழுக்கப்படுகின்றன. குறிப்பாக மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் இடம் பெயரும் பறவைகளுக்கு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஒளி மாசால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய நியூயார்க்கில் உள்ள என்ஜிஓ அமைப்பான கார்னெல் லேப் ஆஃப் ஆர்னிதாலஜியைச் சேர்ந்த நைடிங்கேல்ஸ், சிட்டுக்குருவிகள், போர்ப் பறவைகள் போன்ற 165 வகையான புலம் பெயரும் பாடும் பறவைகளின் வாழ்க்கை முறையை ஓராண்டாக ஆய்வு செய்துள்ளனர். அதேபோல் அமெரிக்கா முழுவதும் இரவு நேரத்தில் ஒளிரும் 15,743 வகையான செயற்கை விளக்குகளில் இருந்து 479 நச்சு ரசாயனங்கள் வெளிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

Also Read : வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் தற்கொலை செய்துகொள்ளும் பறவைகள்.. காரணம் என்ன.?

அதிக ஒளி மாசுபாடு காற்றில் அதிக அளவு நச்சு இரசாயனங்கள் கலந்திருப்பதைக் காட்டுகிறது. பறவைகள் ஒளியின்பால் ஈர்க்கப்படுவதால், இனவிருத்திப் பருவத்தைத் தவிர, பாட்டுப் பறவைகள் பொதுவாக தீவிரமான மனித நடமாட்டம் உள்ள பகுதிகளிலிருந்து வாழ்விடங்களில் கூடு கட்டும் போது, ​​அவை இந்தப் பொருட்களுக்கு வெளிப்படும்.

இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாக காற்று மாசுபாடு சில பறவை இனங்கள் இடம்பெயர்வதை நிறுத்துவதற்கும், இடம்பெயர்வு உயரங்களை மாற்றுவதற்கும் அல்லது அவற்றின் பாதைகளை மாற்றுவதற்கும் காரணம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய ஆய்வின் மூலமாக ஒளி மாசுபாடு மூலம் வெளியாகும் நச்சு ரசாயனங்கள் பறவைகளின் செல் மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்பது, பெண் பறவைகளிடம் இருந்து அதன் முட்டைகள் வழியாக அடுத்த தலைமுறைக்கு பாதிப்புகளை விளைவிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read : வெள்ளையாக பிறக்கும் குழந்தைக்கு மரண தண்டனை.. ஜாரவா பழங்குடியினரின் விசித்திர பழக்கவழக்கங்கள்

எனவே இரவு நேரத்தில் அதிகப்படியான ஒளிரும் விளக்குகளை பயன்படுத்துவதை குறைப்பது பறவைகளின் இடம் பெயர்விற்கும், இனப்பெருக்கத்திற்கும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் ஒளி மாசுபாட்டைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது, இடம் பெயரும் பறவைகள் நச்சு ரசாயனங்களால் பாதிக்கப்படுவது குறைவதோடு, வாழ்க்கை மற்றும் இனப்பெருக்க விகிதத்தை அதிகரிக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Birds, Trending