Trending Video : சுறாவுக்கே சுளுக்கு பாடம் - யூடியூபை கலக்கும் வீடியோ!

சுறாவுக்கே சுளுக்கு பாடம்

சுறாவின் இடுப்பில் தடவிக் கொடுக்கிறார். சுறாவும் மெய்மறந்து இசைந்து கொடுக்கிறது.

  • Share this:
பிரான்சில் உள்ள நீர்வாழ் அருங்காட்சியகத்தில் சுறா மீன் ஒன்றுக்கு, தொழிலாளி இடுப்பில் தடவிக் கொடுத்தபோது, மெய்மறந்து நிற்கும் வீடியோ காண்போரை வியக்க வைக்கிறது.

யூடியூப்பில் இருக்கும் பாண்டோரா பாக்ஸ் (Pandora box) சேனலில் விலங்குகளின் விதவிதமான சேட்டை மற்றும் கொஞ்சல் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. அண்மையில் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்றில் பிரான்சு நாட்டின் அருங்காட்சியகத்தில் சுறா மீனுக்கு, அங்கு பணியாற்றும் ஒருவர் சுளுக்கு பாடம் போடுகிறார். அதாவது, சுறாவின் இடுப்பில் தடவிக் கொடுக்கிறார். சுறாவும் மெய்மறந்து இசைந்து கொடுக்கிறது. பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் இந்த வீடியோ யூடியூபை கலக்கி வருகிறது.

பிரான்சு நாட்டுக்கு சொந்தமான நியூ கலெடோனியன் தீவு (the New Caledonian) தென் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அதன் தலைநகரான நவுமியாவில் மிகவும் பிரபலமான நீர்வாழ் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. விதவிதமான கடல்வாழ் உயிரினங்கள், அரிய வகை உயிரினங்கள் ஆகியவை அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.கடல் வாழ் உயிரினங்கள் தொடர்பான ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது. சுறா, ஆமை, பூச்சிகள், பாம்புகள் ஆகியவை அந்த அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ALSO READ |  'வளர்த்த பெண்ணை கண்டதும் கத்தி பாசத்தை பொழிந்த கழுதை' கண்ணீருடன் கட்டி அனைத்த சிறுமி - வைரலாகும் வீடியோ

இந்த அருங்காட்சியகத்தை பார்க்க பொதுமக்களுக்கும் அனுமதி உண்டு. செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். 4 மணிக்குமேல் புதிதாக செல்பவர்கள் அருங்காட்சியகத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த அருங்காட்சியகத்துக்கு செல்ல விரும்புவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். அனைத்துவிதமான சகல வசதிகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கலெடோனியன் தீவுக்கு ஆண்டுதோறும் செல்கின்றனர். குறிப்பாக, அங்குள்ள நீர்வாழ் உயிரின அருங்காட்சியகத்தை ஒருமுறையாவது சென்று பார்த்துவிட வேண்டும் என நினைப்பவர்கள் ஏராளம். புகழ்பெற்ற அந்த அருங்காட்சியகத்தில் அண்மையில் மீன்கள் பராமரிக்கப்படும் பகுதியை, அருங்காட்சியகத்தில் பணியாற்றும் தொழிலாளி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

ALSO READ |  "அட இது என் நிழலா?" தன் நிழலை பார்த்து வியந்த ஒட்டக குட்டி - வைரலாகும் வீடியோ

மீன்களும், சுறாவும் உலாவுவதற்கு இடையே அந்தப் பணியை அவர் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி வந்த சிறுத்தை சுறா ஒன்று, அவருடன் கொஞ்சி அலவளாவியது. தொழிலாளியும் சிறுத்தை சுறாவின் இடுப்பில் கை வைத்து மஜாஜ் செய்தார். அவரின் செய்கை சுறாவுக்கு பிடித்துவிட்டதால் என்னவோ, மகிழ்ச்சியாக அதற்கு இசைந்து கொடுக்கிறது.

இந்த அற்புத காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டு தற்போது யூ டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுறாவின் கொஞ்சல் பார்ப்பவர்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில் உள்ளது. பலரும் லைக்குகளை அள்ளிவீசியுள்ளனர். பொதுவாக சுறாக்கள் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவையாக கருத்தப்படுகிறது.

ALSO READ | தண்ணீருக்கு தவித்த கழுகிற்கு தாகம் போக்கிய வழிபோக்கர்கள் - வைரல் வீடியோ!

மனிதர்களைக் கண்டால் பயந்து சென்றுவிடும். பல்வேறு ஆய்வுகளின்படி, 300 சுறாக்களில் வெறும் 12 மட்டுமே மனிதர்களை தாக்கும் குணம் கொண்டவையாக இருப்பதாக கூறப்படுகிறது. தன்னுடைய இயல்புக்கு மாறாக தொழிலாளியுடன் சுறா கொஞ்சி விளையாடுவது, அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: