இரையை வாயில் வைத்து தூங்கிய முதலை... நெருங்கி வந்த சிறுத்தை.. அடுத்து..? - ஷாக் வீடியோ

இரையை வாயில் வைத்து தூங்கிய முதலை... நெருங்கி வந்த சிறுத்தை.. அடுத்து..? - ஷாக் வீடியோ
  • Share this:
உயிரியியல் பூங்கா ஒன்றில் வாயில் இரையை வைத்துக் கொண்டு முதலை ஒன்று தூங்கி உள்ளது. இரையை தனதாக்க சிறுத்தை ஒன்று பதுங்கி பதுங்கி வந்துள்ளது. அதை தொடர்ந்து நடந்த சம்பவத்தின் சில நிமிட வீடியோ பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.

ஆப்பிரிக்காவின் சாம்பியாவில் உள்ள லுவாங்வா தேசிய உயிரியியல் பூங்காவில் தான் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. முதலை ஒன்று தான் வேட்டையாடிய இரையை வாயில் வைத்தப்படி அசந்து தூங்கி உள்ளது. இதை பார்த்த சிறுத்தை ஒன்று அந்த இரையை தன்வசமாக்க பதுங்கி பதுங்கி நெருங்குகிறது.

முதலை நன்றாக அசந்து தூங்கிறதா என்று முதலில் சிறுத்தை சோதனை செய்கிறது. தனது காலால் முதலையை தட்டி தட்டி பார்கிறது. ஆனால் முதலை இரவு நேரம் என்பதால்  நன்றாக அசந்து தூங்கி உள்ளது. கிடைத்த நேரத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட சிறுத்தை முதலையின் வாயிலிருந்த இரையை சாப்பிட தொடங்கியது.


பின் சாவுகசமாக அதன் அருகே உட்காருந்து இரையை சாப்பிட தொடங்கியது. ஒரு கட்டத்தில் முதலை விழிக்க கிடைத்த இரையை முதலையின் வாயிலிருந்து பிடிங்கி கொண்டு ஒடியது.அடுத்து என்ன நடக்கும் என்று பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ ஒரு நிமிடம் 21 வினாடிகள் உள்ளது. மேலும் இந்த வீடியோ இரவு நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்