Home /News /trend /

நாயை வேட்டையாடிய சிறுத்தை; சிசிடிவியில் சிக்கிய திக்திக் நிமிடங்கள்!

நாயை வேட்டையாடிய சிறுத்தை; சிசிடிவியில் சிக்கிய திக்திக் நிமிடங்கள்!

நாயை வேட்டையாடிய சிறுத்தை

நாயை வேட்டையாடிய சிறுத்தை

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வன விலங்குகள் உலாவும் நிகழ்வின் சமீபத்திய சம்பவமாக, ஒரு வீட்டின் வெளியே இருந்த வளர்ப்பு நாய் ஒன்று சிறுத்தையால் தாக்கப்பட்டது.

    மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வன விலங்குகள் உலாவும் நிகழ்வின் சமீபத்திய சம்பவமாக, ஒரு வீட்டின் வெளியே இருந்த வளர்ப்பு நாய் ஒன்று சிறுத்தையால் தாக்கப்பட்டது. இந்த சம்பவம் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு அனிமல் லவ்வர்ஸ் மற்றும் டாக் லவ்வர்ஸ் மத்தியில் விரக்தி மற்றும் வேதனை உடன் வைரல் ஆகி வருகிறது.

    செய்தி நிறுவனமான ஏஎன்ஐ தனது ட்விட்டர் பக்கம் வழியாக பகிர்ந்துள்ள ஒரு வீடியோ கிளிப்பில், ஒரு வீட்டின் தாழ்வான மதில் சுவரின் மீது ஒரு கருப்பு நிற வளர்ப்பு நாய் அமர்ந்திருப்பதை காண முடிகிறது. சில வினாடிகளுக்குப் பிறகு, அந்த நாய் தூரத்தில் எதோ ஒன்று தன்னை நோக்கி வருவதை கவனித்து, குறைக்கிறது. அது ஒரு சிறுத்தை ஆகும். அந்த சிறுத்தை நாயை வேட்டையாட பார்க்கிறது.

    ஒருகட்டத்தில் அந்த நாய் அச்சத்தில் சுவரில் இருந்து இறங்கி அங்குமிரும் ஓடுகிறது. இருப்பினும் அந்தசிறுத்தை அந்த நாயை விடாது பின்தொடர்ந்து தன் இரையைப் பிடிப்பதில் பிடிவாதமாக இருக்கிறது. தப்பிக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் நாய் வீட்டை விட்டு வெளியே குதித்த வேகத்தில் அது சிறுத்தையின் வாயில் சிக்கி கொள்கிறது. பின்னர் அந்த சிறுத்தை அந்த நாயை அதன் வாயில் கவ்விப்பிடித்தபடி அங்கிருந்து வெளியேறியது.



    நாசிக்கின் முங்சரே கிராமத்தில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அங்குள்ள அதிகாரிகளை மேல்முறையீடு செய்ய தூண்டியுள்ளது. ஏஎன்ஐ-யிடம் பேசிய பங்கஜ் கர்க் (துணை வனப் பாதுகாவலர், நாசிக்) முங்சரே கிராம மக்கள் இரவில் தங்கள் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களை அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

    Also Read : ஆண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து திருடும் வினோத திருடன்!

    இதற்கிடையில், இந்த வீடியோ ட்விட்டரில் 1.1 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது, அதே நேரத்தில் பல நெட்டிசன்களையும், விலங்கு ஆர்வலர்களையும், செல்லநாய் விரும்பிகளையும் திகிலடைய வைத்து உள்ளது. பல ட்விட்டர் யூசர்கள் வளர்ப்பு நாயை ஏன் வெளியே விட்டுவிட்டு, அதை சாக விட்டீர்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.சிலர் அது செல்லப் பிராணி தானே? அதை ஏன் வெளியிலேயே விடுகிறீர்கள்? அது உங்களை பாதுகாக்கிறது அல்லவா? சத்தம் கேட்டு நீங்கள் ஏன் அதை பாதுகாக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trending Video, Viral Video

    அடுத்த செய்தி