மகாராஷ்டிராவில் நாயைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை! பதறிய குடும்பம்

மகாராஷ்டிராவில் நாயைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை! பதறிய குடும்பம்
சிறுத்தை
  • News18
  • Last Updated: November 26, 2019, 5:00 PM IST
  • Share this:
மகாராஷ்டிரா மாநிலம் அகமெத்நகர் மாவட்டத்தில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமெத்நகர் மாவட்டத்திலுள்ள பார்னெர் பகுதியைச் சேர்ந்த திலீப் ஜக்டாப் என்பவர் சனிக்கிழமை மாலை வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவர் வளர்க்கும் நாய் ஒன்று அவசரமாக வீட்டுக்குள் புகுந்துள்ளது. அந்த நாயைப் பின்தொடர்ந்து சிறுத்தை ஒன்றும் வந்துள்ளது. அதனைக் கண்டு, திலீப் அச்சமடைந்துள்ளார்.
உடனடியாக அவர் வீட்டிலிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு சிறுத்தை இருந்த அறையை மூடிவிட்டார்.


அதனால், சிறுத்தை ஒரு அறையில் மாட்டிக் கொண்டது. பின்னர், வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனையடுத்து, மகாராஷ்டிரா மாநில வனத்துறை அதிகாரிகள் வந்து 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சிறுத்தை மீட்டனர்.

Also see:

 
First published: November 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்