சிறுத்தையைக் கொன்று கண்கள், நகங்களை தனித்தனியே பிரித்தெடுத்த கிராம மக்கள்... அஸ்ஸாமில் கொடூரம் - வீடியோ

அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் உயிரிழந்த சிறுத்தையின், கண்கள், நகங்களை தனித்தனியே பிரித்தெடுத்து கிராம மக்கள் கொடூரமாக துன்புறுத்தியுள்ளனர்.

சிறுத்தையைக் கொன்று கண்கள், நகங்களை தனித்தனியே பிரித்தெடுத்த கிராம மக்கள்... அஸ்ஸாமில் கொடூரம் - வீடியோ
சிறுத்தை
  • Share this:
கேரளாவில் பசிக்காக உணவு தேடிய யானைக்கு நடந்த கொடூர சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் இமாச்சலபிரதேசத்தில் மீண்டும் ஒரு அவலம் அரங்கேறியது.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜன்துட்டா பகுதியில், வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவு பந்தை உண்ட மாடு வாய் வெடித்து சிதைந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Also read : யானையை தொடர்ந்து பசுவிற்கு நேர்ந்த அவலம்... இணையத்தில் கொதித்தெழும் நெட்டிசன்கள்


இதனிடையே மீண்டும் ஓர் சம்பவம் அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தி, காதப்ரியில் வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கம். அவ்விதம் ஊருக்குள் வரும் சிறுத்தையை பிடிப்பதற்காக சோய்லாம் போடோ என்பவர் வலைவிரித்துள்ளார்.

வலையில் சிறுத்தை ஒன்று மாட்டிக்கொள்ள இதனை கண்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிறுத்தையை பார்வையிட, பயத்தில் சிறுத்தை சிக்கிய வலையில் இருந்து வெளியேறி ஊருக்குள் ஓட ஆரம்பித்துள்ளது.

Also Read: நட்புனா என்ன தெரியுமா... மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நண்பனான நாய் - வைரலாகும் வீடியோஇந்நிலையில் இடையில் வந்த 7 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தையை ஊர் மக்கள் கைகளில் கிடைத்த அனைத்தையும் கொண்டு அடித்துள்ளனர். இதில் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த சிறுத்தையின், கண்கள், நகங்களை தனித்தனியே பிரித்தெடுத்து கிராம மக்கள் கொடூரமாக துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தற்போது 6 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கிராம மக்களின் இந்த செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.

     

First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading