கண் இமைக்கும் நேரத்தில் லாரி கிளினரை தாக்கிய சிறுத்தை - ஷாக்கிங் வீடியோ

திடீரென் பாய்ந்து வந்த சிறுத்தை அவரது காலை பிடிக்க, நல்வாய்ப்பாக கிளினர் அதனிடமிருந்து விடுபடுகிறார்.

கண் இமைக்கும் நேரத்தில் லாரி கிளினரை தாக்கிய சிறுத்தை - ஷாக்கிங் வீடியோ
சிசிடிவி காட்சிகள்
  • Share this:
ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலையில் லாரி கிளினரை சிறுத்தை தாக்கும் காட்சி வெளியாகி உள்ளது.

ஹைதராபாத்தில் காட்டிலிருந்து வழிமாறிய சிறுத்தை ஒன்று முக்கிய சாலைகளில் நடமாடும் காட்சி சில நாட்களுக்கு முன் இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் முக்கிய சாலையில் சிறுத்தை நடமாட்டம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. அதில் சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருக்கிறது. டிரைவர் மற்றும் கிளினர் லாரிக்கு நின்று கொண்டிருக்க சிறுத்தை வருவது தெரிந்ததும் டிரைவர் லாரிக்குள் ஏறி விடுகிறார்.


கிளினர் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி பின் லாரிக்குள் ஏற முயற்சி செய்கிறார். திடீரென் பாய்ந்து வந்த சிறுத்தை அவரது காலை பிடிக்க, நல்வாய்ப்பாக கிளினர் அதனிடமிருந்து விடுபடுகிறார்.அதன்பின் சிறுத்தை அருகில் இருக்கும் பூட்டிய கடை ஒன்றின் மீது ஏற முடியாமல் திணறுகிறது. அங்கிருக்கும் நாய்கள் சிறுத்தை பார்த்து துரத்த சிறுத்தை அங்கிருந்து வேறொரு இடத்திற்கு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தை இன்னும் ஒரிரு நாட்களில் பிடிப்பட்டு விடும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading