நீ வேணா சண்டைக்கு வா.. வாடா .. வந்து பாருடா - சிறுத்தையை நேருக்கு நேர் சண்டைக்கு இழுத்த பூனை - வைரலாகும் வீடியோ

சிறுத்தையை நேருக்கு நேர் சண்டைக்கு இழுத்த பூனை

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும் என்பதை பூனை ஒன்று நிரூபணம் செய்துள்ளது.

 • Share this:
  மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் சிறுத்தையை உருவம் கண்டு பயமின்றி எதிர்கொண்ட பூனையின் செயல் வைரலாகி வருகின்றது.

  உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
  அச்சாணி அன்னார் உடைத்து.

  என்பது திருக்குறள். (அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:667. )இதற்கான விளக்கம் உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும் என்பதாகும்.  இந்த குறளுக்கு பொருந்தும் படி செயல் ஒன்று தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பூனையை துரத்திச் சென்ற சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்துள்ளது. அப்போது சிறுத்தையை கண்டு சிறிதும் அஞ்சாத பூனை அதனை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் துணிந்து நீ வேணா சண்டைக்கு வா.. வாடா .. வந்து பாருடா என்பன போன்று எதிர்த்து நின்றுள்ளது.  கிணற்றின் அருகே சுற்றித்திரிந்த பூனையைப் பிடிக்க சிறுத்தை தொடர்ந்து முயன்றுள்ளது. இறுதியாக பூனை கிணற்றினுள் சுவரின் விளிம்பிக்குச் சென்று நின்றது. பின்னரே தொடர்ந்த சிறுத்தை பூனையை விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் எதிர்த்து நின்ற பூனை நேருக்கு நேர் மோதத் துணிந்த செயல் பார்ப்போரை இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

  இது குறித்து மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் மேற்கு மண்டல துணை வனப் பாதுகாவலர் பங்கஜ் கர்க் கூறுகையில், சிறுத்தை பூனையை துரத்தியது. இறுதியில் சிறுத்தையே கிணற்றில் சிக்கிக் கொண்டது.
  வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு காட்டுக்குள் விட்டுள்ளனர்' என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: