• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Mars: செவ்வாய் கிரக மேற்பரப்பில் காணப்பட்டவை உண்மையான ஏரிகள் அல்ல - ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு!

Mars: செவ்வாய் கிரக மேற்பரப்பில் காணப்பட்டவை உண்மையான ஏரிகள் அல்ல - ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

தற்போது மார்ஷியன் சவுத் போலார் லேயர்டு டெபாசிட்ஸின் பகுதியில் இருந்து, 10 முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் தண்ணீர் இருப்பதாக கருதப்படுகிறது.

  • Share this:
செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட ரேடார் சிக்னல்கள், முதலில் திரவ நீர் என்று அறியப்பட்டிருந்தது. செவ்வாய் கிரக தென் துருவப் பிரேதசங்களில் காணப்பட்ட இதற்கு சவுத் போலார் லேயர்டு டெபாசிட்ஸ் என்றும் பெயரிடப்பட்டிருந்தது. செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தின் கீழ் காணப்படும், மேற்பரப்பு ஏரிகள், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின், மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டரின் தரவைப் பயன்படுத்தியுள்ளது.

இதன் மூலம், இந்த மேற்ப்பரப்பில் காணப்படும் திரவம் போன்ற நீர், உண்மையில் ஏரிகளாக இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர். 2018 ஆம் ஆண்டில் இரண்டு ஆராய்ச்சி குழுக்கள், மார்ஸ் எக்ஸ்பிரஸ் சுற்றுப்பாதையில் இருந்த தரவுகளைப் பயன்படுத்தி ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்பை அறிவித்தன. இந்த சிவப்பு கிரகம் தென் துருவத்திலிருந்து ரேடார் கருவியின் சிக்னல்களை பிரபதிபலிக்கின்றன. இந்த பிரதிபலிப்பின் மூலம், கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு திரவ நிலையில் ஏரியின் மேற்பரப்பு இருப்பதாக வெளிப்படுத்துகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும், நாசா மற்றும் அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழக (ஏ.எஸ்.யூ) விஞ்ஞானிகள் குழு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் தரவை தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த பரந்த தொகுப்பின் ஆய்வு, தென் துருவத்தைச் சுற்றி, ஒரே மாதிரியான டஜன் கணக்கான ரேடார் பிரதிபலிப்புகளைக் கண்டறிந்தது. ஆனால், ஆராய்ச்சிக் குழுவினரைப் பொறுத்த வரை, சிக்னல்கள் பெறப்பட்ட பல பகுதிகள் மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்கள், எனவே, தண்ணீர் திரவ நிலையில் இருக்க வாய்ப்பு குறைவு என்று தெரிவித்துள்ளனர்.

“ஏதேனும் ஒரு பொருளின் ஊடாக ரேடார் பயணிக்கும் போது அதன் ஆற்றலை இழக்கின்றது. எனவே, அதன் ஆழமான பரப்பிலிருந்து மேலே வரும் பிரதிபலிப்புகள், மேற்பரப்பில் இருந்து வரும் பிரதிபலிப்பை விட பிரகாசம் குறைவாக இருக்க வேண்டும்” என்று ஏஎஸ்யூ ஸ்கூல் ஆஃப் எர்த் மற்றும் ஸ்பேஷ் எக்ஸ்ப்ளோரேஷனைச் சேர்ந்த ஆதித்ய குல்லர் தெரிவித்தார்.

“நிலத்தடியில் இருந்து வரும் பிரதிபலிப்புகள் வழக்கத்துக்கு மாறாக பிரகாசமாக இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. இந்த பிரகாசமான பிரதிபலிப்புக்கு, திரவ நீர் தான் காரணம், ஏனென்றால், ரேடாரில் திரவம் கூடுதல் ஒளிர்வுடன் காணப்பட்டது, என்று இந்த இரண்டு ஆய்வுகளின் முடிவும் தெரிவித்தன” என்றும் கூறினார். இந்த திரவ பிரதிபலிப்புகள் சவுத் போலார் லேயர்டு டெபாசிட்ஸ் என்று பெயரிடப்பட்டது.

Also read... Birds: பறவைகள் இடம்பெயர்வது எப்படி? புதிய ஆய்வில் தகவல்!

இந்த பகுதிகள், தற்போது மார்ஷியன் சவுத் போலார் லேயர்டு டெபாசிட்ஸின் பகுதியில் இருந்து, 10 முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் தண்ணீர் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த புதிய ஆய்வை மேற்கொள்ள, இதே போன்ற வலுவான ரேடியோ சிக்னல்களை ஆய்வு செய்ய குழு முடிவு செய்தது. இதில், தென் துருவ பகுதிகள் முழுவதிலும், கடந்த 15 ஆண்டுகால MARSIS தரவுகளில் 44,000 அளவீடுகளுக்கும் ஆய்வு செய்யப்பட்டது.

முன்பை விட கூடுதலான பரப்பளவில் மற்றும் கூடுதல் ஆழத்துடன் டஜன் கணக்கில் கூடுதல் பிரகாசத்துடன் ரேடார் பிரதிபலிப்புகள் வெளிப்பட்டன. சில இடங்களில், அது மேற்பரப்பை விட ஒரு மைலுக்கும் குறைவான தொலைவிலேயே இருந்தன. எனவே, தட்பவெட்ப நிலை 63 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவிற்கும் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் உறைந்து காணப்பட்டிருக்கும். நீரின் உறையும் நிலையை குறைக்கும் பெர்க்ளோரேட்டுகள் எனப்படும் உப்பு தாதுக்கள் இருந்தாலும், இந்த தட்பவெட்ப அளவுக்கு தண்ணீர் உறைந்திருக்கும் என்று ஆய்வு தெரிவித்தது.

“இந்த சிக்னல்கள் திரவ நீரா அல்லது வேறு என்னவென்று எங்களால் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால், முதலில் கண்டறியப்பட்டதை விட, தற்போது மேலும் பரவலாகக் காணப்படுகிறது” என்று கூறினார், நாசாவின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வகத்திலிருந்து, ஜெஃப்ரி ப்ளாட் கூறினார். “செவ்வாய் கிரகத்தின் தென் துருவம் முழுவதும் திரவ நீர் இருக்கலாம் அல்லது, இந்த சிக்னல்கள் வேறு எதையோ தெரிவிக்கின்றன” என்று ப்ளாட் தெரிவித்தார். நாசாவின் 2001 மார்ஸ் ஒடிஸிக்கு அடுத்ததாக, பூமியைத் தவிர்த்து, மற்றொரு கிரகத்தின் சுற்றுப்பாதையில் தொடர்ந்து, நீண்ட காலமாக சுற்றிவரும் இரண்டாவது விண்கலம், மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆகும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: