Home /News /trend /

இங்க ஜெயில்ல ரொம்ப குளிர் அடிக்கும் - கவனம் ஈர்த்த காவல்துறையின் எச்சரிக்கை.!

இங்க ஜெயில்ல ரொம்ப குளிர் அடிக்கும் - கவனம் ஈர்த்த காவல்துறையின் எச்சரிக்கை.!

Jail

Jail

Trending | இங்கு கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் சமவெளிப் பகுதி சாலைகளிலேயே மதுப்பிரியர்கள் வாகனம் ஓட்டி வந்தால், அவர்களுக்கு மட்டுமல்லாமல் பிறருக்கு ஆபத்தாக முடிந்து விடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கோடைகாலம் மற்றும் விடுமுறை காலங்களில் நம்மில் பலருக்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை ஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்று வர வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக இருக்கும். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் இடங்களாக மலை ஸ்தலங்கள் இருக்கின்றன.

இவ்வாறு சுற்றுலா செல்லும்போது ஒரு சிலர் சாலைப் பாதுகாப்பு விதிகளை மறந்து விடுவார்கள். குறிப்பாக, மது பிரியர்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை. சாதாரண நாட்களில் உள்ளூரிலேயே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச் செல்வதுதான் இவர்களது வாடிக்கையாக இருக்கும்.

அதிலும் மனதிற்கு கிளுகிளுப்பை கொடுக்கும் மலை ஸ்தலங்களுக்கு இந்த மது பிரியர்கள் சென்று விட்டால், அவர்களுக்கு மது வாசனை குறித்து சொல்லவா வேண்டும். மது அருந்தி ரொம்பவே என்ஜாய் செய்ய தொடங்கி விடுவார்கள்.

ஆனால், இங்கு கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் சமவெளிப் பகுதி சாலைகளிலேயே மதுப்பிரியர்கள் வாகனம் ஓட்டி வந்தால், அவர்களுக்கு மட்டுமல்லாமல் பிறருக்கு ஆபத்தாக முடிந்து விடுகிறது.இத்தகைய சூழ்நிலையில், மிக ஆபத்தான வளைவுகள், சாலையை ஒட்டி மாபெரும் பள்ளத்தாக்குகள் என முற்றிலும் அபாயங்கள் நிறைந்த மலைப் பகுதியில் சாலைப் பாதுகாப்பு விதிகள் மிக, மிக முக்கியம் அல்லவா. ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு வழக்கம்போல மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வரும் நபர்களை மலைப்பகுதியில் உள்ள காவல் துறையினர் தண்டிக்க தவறுவதில்லை. மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்ற எச்சரிக்கை பலகை மிக அதிகமான இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்.

Also Read : மணமேடையில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்ட மணமக்கள் - வீடியோ

கவனம் ஈர்த்த எச்சரிக்கை

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலி மலை ஸ்தலத்திலும் மது பிரியர்களை எச்சரிகும் விதமாக காவல் துறையினர் அறிவிப்பு பலகைகளை ஆங்காங்கே வைத்துள்ளனர். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், காவல்துறையினர் அதில் பயன்படுத்தியுள்ள வாசகங்கள் தான்.

“மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்; மணாலியில் உள்ள சிறைச்சாலைகளில் கடும் குளிர் நிலவும். சிகரெட் புகைப்பது நுரையீரலை எரிக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்ஸ்டாகிராமில் வைரல்

கவனம் ஈர்க்கும்படியாக கண்ணில் என்ன தென்பட்டாலும் அதை உடனடியாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது நெட்டிசன்களின் வழக்கம். அந்த வகையில், இந்த அறிவிப்பு பலகையை வீடியோவாக படம் பிடித்த நெட்டிசன் ஒருவர், அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

Also Read : விமானத்தில் பிரேக்ஃபாஸ்ட் கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்.!

வீடியோவை இதுவரையில் 6 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பெரும்பாலும் சிரிப்பு ஸ்மைலியை பதிவு செய்துள்ளனர். 
View this post on Instagram

 

A post shared by Ajnas kv (@travel_bird__)


என்ன இருந்தாலும் கோடை காலத்தில் இந்த தவறை செய்தால், நமக்கு பலனுள்ளதாக அமையும் என்று நெட்டிசன் ஒருவர் வேடிக்கையாக குறிப்பிட்டுளார்.
Published by:Selvi M
First published:

Tags: Jail, Manali, Trending

அடுத்த செய்தி