KOREAN MAN TEARS UP AFTER HE MEETS DECEASED WIFE THROUGH VIRTUAL REALITY VIN GHTA
உயிரிழந்த மனைவியுடன் கண்ணீர்மல்க நடனமாடிய கணவர் - விர்ச்சுவல் ரியாலியிட்டில் எல்லாம் சாத்தியமே!
இறந்த மனைவியை சந்தித்த கணவர்
மனைவியின் மீது மிகுந்த பாசத்தைக் கொண்டிருந்த கிம் ஜங் சூ, மனைவியின் நிழலையாவது மீண்டும் ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என ஏங்கியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த தொலைக்காட்சி நிறுவனம், கிம்ஜங்கின் ஆசையை விரிச்ஷூவல் ரியாலிட்டி மூலம் தற்போது நிறைவேற்றியுள்ளது.
விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் 4 ஆண்களுக்கு முன் உயிரிழந்த மனைவியுடன் கணவர் கண்ணீர்மல்க நடனமாடிய காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதெல்லாம் சாத்தியமா? என யோசித்த விஷயங்கள் எல்லாம் தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால் கண்முண்ணே சாத்தியமாகி வருகின்றன. உட்சபட்சமாக, 4 ஆண்டுகளுக்கும் முன்பு நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த மனைவியுடன் தென்கொரியாவைச் சேர்ந்த ஒருவர் தற்போது கண்ணீர்மல்க நடனமாடியிருக்கிறார். விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற தொழில்நுட்பம் அதற்கு உதவியாக இருந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களை சந்திக்கலாம், அவர்களுடன் பேசலாம், நடனமாடலாம்.
தென் கொரியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்று மீட்டிங் யூ (Meeting you) என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி டாக்குமென்டிரியை தயாரித்துள்ளது. அதில், தொழில்நுட்பத்தின் உதவியால் நாம் நேசித்தவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். மீட்டிங் யூ சீசன் ஒன்றில் கடந்த ஆண்டு தாய் ஒருவர் அவரின் மகளை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த அந்த தொலைக்காட்சி நிறுவனம் இந்த ஆண்டு, இழந்த மனைவியை சந்திக்கும் வாய்ப்பை கணவருக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். மிட்டிங் யூ சீசன் 2 வில் 51 வயதான கிம் ஜங் சூ (Kim Jung-soo) என்பவர் பங்கேற்றுள்ளார்.
5 குழந்தைகளுக்கு தாயான அவரின் மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்பட்டு மரணத்தை தழுவியிருக்கிறார். மனைவியின் மீது மிகுந்த பாசத்தைக் கொண்டிருந்த கிம் ஜங் சூ, மனைவியின் நிழலையாவது மீண்டும் ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என ஏங்கியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த தொலைக்காட்சி நிறுவனம், கிம்ஜங்கின் ஆசையை விரிச்ஷூவல் ரியாலிட்டி மூலம் தற்போது நிறைவேற்றியுள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் மனைவியை சந்தித்த கிம் ஜங், அவருடன் நடனமாடுகிறார்.
ஒரு கட்டத்தில் தன் மனைவியை பார்த்து உடைந்து அழுதும் விடுகிறார். தாய் மற்றும் தந்தை இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சியை பார்த்த கிம் ஜங்கின் குழந்தைகளும் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதுள்ளனர். இது குறித்து பேசிய கிம் ஜங்கின் மூத்த மகள், தந்தையின் செயல் தங்களுக்கு வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். தாய் இறந்து 4 ஆண்டுகளை கடந்துவிட்டதால், அந்த சோகத்தில் இருந்து வெளியேறி புது வாழ்க்கையை அவர் வாழவேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என தெரிவித்துள்ளார்.
மற்றொரு மகள் பேசும்போது, தந்தை கிம்ஜங் மீட்டிங் யூ நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர், மனைவியின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தது தங்களுக்கு தெரியும் எனக் கூறியுள்ள மற்றொரு மகள், நோய்வாய்ப்பட்டு தலைமுடிகளை இழந்து தாய் இருந்தபோதும் அவர் அழகாக இருப்பதாக தனது தந்தை கூறியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய கிம் ஜங் சூ, மனைவியை சந்திக்க வேண்டும் என்பது தன்னுயை கடைசி விருப்பம் எனத் தெரிவித்தார். அதனடிப்படையிலேயே மீட்டிங் யூ டாக்குமென்ரியில் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.