ஒரு மணமகனோ அல்லது மணமகளோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ, திருமணத்தின் போது எடுக்கட்ட வீடியோக்களை எப்பொழுது பார்த்தாலும் சரி, அது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாய் - அதே சமயம் மிகவும் வேடிக்கையானதாகவும் - இருக்கும். ஆனால், அப்படியான 'வெட்டிங் வீடியோ'க்களில் ஆயிரத்தில் ஒரு வீடியோ மட்டுமே "செம்ம" வைரல் ஆகும்; அப்படியான ஒரு வீடியோவை பற்றிய கட்டுரையே இது!
இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ அனைத்து விதமான யூசர்களுக்கு மத்தியிலும் வைரலாக பரவி வருகிறது. எக்கச்சக்கமான வியூஸ், லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வரும் அந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனதை தொடந்து, மற்ற சமூக ஊடங்கங்களின் வழியாகவும் பரவி, தற்போது இணையத்தில் அதிகம் ரசிக்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக உருமாறி உள்ளது. குறிப்பிற்காக இந்தியர்கள் மத்தியிலும், இந்திய கலாச்சாரத்தை விரும்புவோர் மத்தியிலும்! அப்படி என்ன வீடியோ அது?
அது கொரியாவை சேர்ந்த ஒரு மணமகனும், இந்தியாவை சேர்ந்த ஒரு மணமகளும் திருமணம் செய்துகொண்ட வீடியோவே ஆகும். இதில் என்ன பெரிய சுவாரசியம் இருக்கிறது? அமெரிக்க பெண்ணை இந்திய மாப்பிளை திருமணம் செய்து கொள்வதும், ஆஸ்திரேலிய நாட்டுக்காரரை இந்திய பெண் திருமணம் செய்து கொள்வதும் வழக்கமான செய்திகள் தானே? என்று நீங்கள் கேட்கலாம்!
ஆம்! ஆனால் நாம் இங்கே பேசும் இந்திய-கொரிய ஜோடியின் திருமணத்தில், மணப்பெண் மிகவும் அழகாக, புடவை அணிந்து தன் திருமணத்தில் பங்கேற்றார். இந்த வீடியோவில் நாம் காணக்கூடிய மணமகனின் பெயர் ஜோங்கு மற்றும் மணமகளின் பெயர் நேஹா ஆகும். இவ்விருவரும் தற்போது தென் கொரியாவின் தலைநகரான சியோலில் வசிக்கின்றனர். இந்த ஜோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.4 லட்சத்திற்கும் மேலானோர் ஃபாலோ செய்கின்றனர். அதன் வழியாக பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், மணப்பெண் நேஹா சேலையிலும் மற்றும் மணமகன் ஜோங்கு சூட் அணிந்து கொண்டும் எப்படி தங்கள் திருமண விழாவிற்குள் நுழைகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
"எனது கொரிய திருமணத்தில் நான் சேலை அணிந்தேன்" என்கிற 'டெக்ஸ்ட்' உடன் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவின் முழு பதிப்பும் குறிப்பிட்ட ஜோடியின் யூட்யூப் சேனலிலும் பகிரப்பட்டுள்ளது. நேஹாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கவும், சேலை அணியும் இந்திய கலாச்சாரத்தின் வேர்களை கொரியாவில் ஊன்றியதற்காகவும், பலரும் தத்தம் கருத்துக்களை கமெண்ட்களாக பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
View this post on Instagram
இந்த வீடியோ மூன்று நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது. கொரியாவில் - ஒரு வெளிநாட்டு மண்ணில் - ஒரு பெண் எப்படி தனது பாரம்பரியங்களை மதிக்கிறார் மற்றும் செயல்படுத்துகிறார் என்கிற பூரிப்பின் கீழ் எக்கச்சக்கமான பாராட்டுகளை பெற்று, தற்போது இந்த வீடியோ 9.7 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர், "நீங்கள் இருவரும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்" என்று கமெண்ட் செய்ய, இன்னொருவர் "நீங்கள் என் இதயத்தைப் பாடச் செய்கிறீர்கள்" என்று கமெண்ட் செய்து உள்ளார். பலரும் "நீங்கள் சேலையில் அழகாக இருக்கிறீர்கள்" என்றும் கமெண்ட் செய்துள்ளனர். இந்த வைரல் வீடியோ குறித்து உங்களுடைய கருத்து என்ன!?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Viral Video