ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஆமையை சாப்பிட்டு அதன் ஓட்டை தலையில் மாட்டிக்கொண்ட உடும்பு - ஷாக்கிங் வீடியோ

ஆமையை சாப்பிட்டு அதன் ஓட்டை தலையில் மாட்டிக்கொண்ட உடும்பு - ஷாக்கிங் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video | கொமோடோ டிராகன்கள் உலகின் மிகப்பெரிய பல்லிகளாக அறியப்படுகின்றன. அவை அனைத்தையும் சாப்பிடக்கூடிய திறன் கொண்டவையாக கருதப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வேட்டையாடும் விலங்குகள் தன் உணவை ஆக்ரோஷமாக சாப்பிடும் வீடியோக்கள நாம் காண்பதுண்டு. அவை நம்மை சற்று பயமுறுத்தும் விதத்திலும் சிலவை முகம் சுளிக்கும் வன்ணத்திலும் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் இப்பொழுது வைரலாகி வருகிறது. பொதுவாக உடும்பின் உருவம் நம்மில் பலருக்கு பயத்தை தரும். அதிலும் ஒரு உடும்பு தான் வேட்டையாடி தின்ற விலங்கின் உடலை தலையில் மாட்டிக்கொண்டு உங்கள் முன் வந்தால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள்..

  கொமோடோ டிராகன் தனது தலையில் ஆமையின் உடலை வைத்துக்கொண்டு நடந்து செல்லும் பழைய வைரல் வீடியோ ஆன்லைனில் மீண்டும் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதன்முதலில் ஆன்லைனில் இந்த சிலிர்க்க வைக்கும் வீடியோ பகிரப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது.

  கொமோடோ டிராகன்கள் உலகின் மிகப்பெரிய பல்லிகளாக அறியப்படுகின்றன. அவை அனைத்தையும் சாப்பிடக்கூடிய திறன் கொண்டவையாக கருதப்படுகிறது. அவற்றின் உடலில் சுறா போன்ற பற்கள் மற்றும் நச்சு தன்மை கொண்ட விஷம் உள்ளது. இதனால் அவற்றால் ஒரே நேரத்தில் அவற்றின்  எடைக்கு சமமான 80 சதவிகித உணவை உட்கொள்ள முடியும்.

  Read More : ஊஞ்சல் ஆடபோறேன்.. பூங்காவுக்குள் நுழைந்து ஊஞ்சல் ஆடிய யானை! க்யூட் வீடியோ!

  இந்த கிளிப்பில், கொமோடோ டிராகன் கடல் கரையில் நடந்து செல்வதைக் காணலாம்.பெரிய ஆமை ஒன்றை சப்பிட்ட பிறகு அதன் ஓட்டை தொப்பி போல தலையில் மாட்டிக்கொண்டு கடற்கரையில் சாவகாசமாக நடந்து வருகிறது. ஓட்டினுள் தன் தலையை விட்டு அந்த ஆமையின் உடல் முழுவதும் தின்ற பிறகு தலையை சிலுப்பி ஆமையின் ஓட்டை வீசுகிறது. வீடியோவின் முடிவில் பங்குபெறும் இந்த காட்சிகள் பயத்துடன் கூடிய ஒரு வித “பக்” உணர்வை அளிக்கிறது.

  சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது. நூற்றுக்கணக்கான விலங்கு ஆர்வலர்கள் இந்த கிளிப்புக்கு பதிலளித்துள்ளனர். ராட்சத பல்லி தனது இரையை கொல்லுவதை உறுதி செய்கிறது என்று ஒரு பயனர் கூறினார்.இவ்வாறு தங்களது ஆச்சரியத்தையும், பயத்தையும் கமெண்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending Video, Viral, Viral Video