முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கன மழையில் நின்று நாய்களுக்கு குடை பிடித்த போலீசார் - வைரல் புகைப்படம்!

கன மழையில் நின்று நாய்களுக்கு குடை பிடித்த போலீசார் - வைரல் புகைப்படம்!

கன மழையில் நின்று நாய்களுக்கு குடை பிடித்த போலீசார்

கன மழையில் நின்று நாய்களுக்கு குடை பிடித்த போலீசார்

இந்த புகைப்படத்தை கவனித்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர், கார்ட்டூனிஸ்டுமான மஹாஃபுஜ்-அலி, இதனை ஓவியமாக வரைந்து ஷேர் செய்துள்ளார்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

கொல்கத்தா காவல்துறையால் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது அனைவரது இதயத்திலும் இடம் பிடித்துள்ளது.

தற்போதைய அவசர உலகத்தில் சுவாரஸ்யமான சில விஷயங்களை நாம் காண தவறிவிடுகிறோம். ஆனால் சிலர் அதனை கவனித்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவதில் கவனமாக இருக்கின்றனர். அப்படி சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்படும் சில விஷயங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு டிராபிக் போலீசார் குடையை பிடித்தவாறு போக்குவரத்தை நிர்வகிப்பதை காணலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்தில் நெஞ்சை நெகிழ வைப்பது என்னவென்றால், அதில் இரண்டு நாய்கள் அவர் பிடித்திருக்கும் குடைக்கு கீழே அமர்ந்திருப்பதை காணலாம். Moment of the Day! என்ற தலைப்பில் கொல்கத்தா காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில் கிழக்கு போக்குவரத்து கான்ஸ்டபிள் தருண் குமார் மண்டல் என அவரது பெயரையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இதுவரை ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ட்ராபிக் காவலரின் அற்புதமான செயலை பாராட்டி வருகின்றனர். மேலும் எண்ணற்ற கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது. கன மழையையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் கொல்கத்தா போலீஸ், விலங்குகளுடன் கனமழையில் கடமையை செய்து வருகிறார் என ஒருவர் கமெண்ட்ஸ் செய்துள்ளார். நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு என் சல்யூட் என மற்றொருவரும், இந்த புகைப்படம் மிகவும் அழகாக இருக்கிறது, காவல்துறைக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை கவனித்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர், கார்ட்டூனிஸ்டுமான மஹாஃபுஜ்-அலி, இதனை ஓவியமாக வரைந்து ஷேர் செய்துள்ளார். வைரல் படத்தின் அடிப்படையில் பல்வேறு கலைப்படைப்புகளை உருவாக்கி வரும் இவர், இந்த புகைப்படத்தை பார்த்து இதுகுறித்து ஏதேனும் ஒன்றை உருவாக்க எண்ணி ஒரு போலீசார் குடையை பிடித்தபடி இருக்க கீழே இரண்டு நாய்கள் இருக்கும் வகையில் ஒரு அழகான ஓவியத்தை வரைந்துள்ளார்.

Also read... நியூயார்க்கில் கார் எஞ்சினில் சிக்கிய பூனையை மீட்ட அதிகாரி - நெட்டிசன்கள் பாராட்டு!

இதுகுறித்து விளக்கிய மஹாஃபுஜ்-அலி, நான் ஆஸ்திரேலியாவில் தற்போது இருந்தாலும் முன்னர் கொல்கத்தாவில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தான் எனது பொறியியல் பட்டப்படிப்புகளை முடித்தேன். அப்போது நான் கொல்கத்தாவில் வசித்ததால் அந்த நகரத்திற்கும் எனக்கும் ஒரு இணைப்பு உள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் எனக்கு பாசம் குறித்த உணர்ச்சிகள் தோன்றியது, மேலும் எனக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் இதனை பார்த்து நான் உற்சாகமடைந்தேன். ஒரு போலீஸ்காரரின் இதயப்பூர்வமான அன்பை அந்த புகைப்படத்தில் பார்த்தேன், அதனால் தான் அதனை ஓவியமாக வரைய நினைத்தேன் என கூறியுள்ளார்.

First published:

Tags: News On Instagram, Trending