“எப்புடி இருந்த நான்... இப்புடி ஆயிட்டேன்“ வைரலாகும் விராட் கோலியின் பதிவு

“எப்புடி இருந்த நான்... இப்புடி ஆயிட்டேன்“ வைரலாகும் விராட் கோலியின் பதிவு
  • Share this:
10 வருடத்திற்கு முன் இருந்த புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள கோலியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் 'Beginning of the decade' மற்றும் 'End of the decade' என்ற தலைப்பில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அதாவது பத்து வருடத்திற்கு முன் எப்படி ஆரம்பித்து தற்போது எப்படி முடித்துள்ளோம் என்பதே இதன் அர்த்தமாகும்.

இந்த வாசகத்தை பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். 10 வருடத்திற்கு முன் கோலி கையில் செருப்புடனும், தற்போது அவர் பயன்படுத்தும் உயர்தர ஷூ உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் பூமா ஷூ நிறுவனத்திற்கு அவர் விளம்பர தூதராகவும் உள்ளார்.

 
View this post on Instagram
 

Started from them flip flops, now we here! 😎😁 @pumaindia


A post shared by Virat Kohli (@virat.kohli) on


விராட் கோலியின் இந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் பலர் லைக் செய்து வருகின்றனர். கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளை தம் வசம் வைத்துள்ளார்.
First published: January 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்