இந்தியாவில் வெகுஜன மக்கள் மத்தியில் கோவிட் தொற்றுக்குப் பிந்தைய விலை வாசி உயர்வு கவலையை தருகிறது. குறிப்பாக, காய்கறி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்களின் உயர்வு தட்டுப்பாடு காலங்களில் கிடுகிடுவென அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கும். ஆனால், குங்குமப்பூ, ஹிமாலயன் காளான் மற்றும் டிராகன் பழம் போன்ற உணவு பொருள்கள் பொதுவாகவே ஆடம்பர உணவாக பார்க்கப்படும்.
அப்படித்தான் Hop shoots என்னும் காய்கறிதான் உலகின் மிகவும் விலை உயர்ந்த காய்கறியாக பார்க்கப்படுகிறது. ஆம் இந்த இந்த காய்யின் விலை தங்கம், வைரம் விலையை விட ஜாஸ்திதான். அப்படி என்ன அதன் விலை கிலோ லட்சம் ரூபாய் இருக்குமா என்று நீங்கள் நினைத்தால் அதற்கு பதில் ஆம் என்பது தான் நிதர்சனம்.
1 கிலோ Hop shoots-ன் விலையானது சுமார் ரூ.85,000 இருந்து ரூ.1 லட்சம் வரை விற்கப்படுகிறது. இந்த hop shoots காய் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானது.மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற இந்த காய்கறி பொதுவாக இந்தியாவில் பயிரிடப்படுவதில்லை. எனினும் இது முதலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய பண்ணையில் வளர்க்கப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ் சிங் என்ற விவசாயி ரிஸ்க் எடுத்து Hop Shoots-ஐ காய்கறியை விளைவித்தார். இந்த Hop shoots காய்கறிகளை வளர்த்து கடினமான உடல் உழைப்பும் கவனிப்பும் தேவை. இதன் காரணமாகவே இந்த காய்கறி இவ்வளவு விலையுயர்ந்ததாக விற்கப்படுகிறது. இவற்றை வளர்க்க மூன்று ஆண்டுகள் ஆகும். மேலும் அறுவடை செய்யும் வரை அதை தினமும் பராமரிக்க வேண்டும்.
இந்த காய்கறியில் முக்கியத்துவம் வாய்ந்த விட்டமின்கள், தாதுகள் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றன. இதை சாப்பிடுவதால் காசநோயில் இருந்து நிவாரணம் கிடைப்பதுடன், கவலை, தூக்கமின்மை, மன அழுத்தம், கவனக்குறைவு, அதிக செயல்பாட்டுக் கோளாறு (ADHD) போன்ற நோய்களை குணப்படுத்த முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இதையும் படிங்க: கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்த ஒரு நாயின் சுவாரஸ்ய கதை..!
இந்த தாவரத்தில் இருக்கும் அமிலங்கள் புற்றுநோய் செல்களை கொல்லவும், லுகேமியா செல்களைத் தடுக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது. மேலும், முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு, தசைநார் நலன் போன்றவற்றை இது தருகிறது.
இதன் அறிவியல் பெயர் Humulus lupulus. குறிப்பாக இந்த தாவரம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிராந்தியங்களை சேர்ந்தவை. உலகில் மிகவும் மதிப்புமிக்க இந்த காய்கறி செடி சுமார் 6 மீட்டர் வரை வளரக்கூடியது. அதே போல் ஒரு செடியின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vegetable, Vegetable price, Viral