ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்தியாவில் 500 ஆண்டுகளாக பெண்கள் நடத்தும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தை!

இந்தியாவில் 500 ஆண்டுகளாக பெண்கள் நடத்தும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தை!

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை

பெண்கள் நடத்தும் மிகப்பெரிய சந்தையாக இருந்தாலுமே, திருமணமான பெண்களுக்கு மட்டும் தான் இங்கு சந்தை அல்லது வணிகம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான இடங்கள் சுற்றுலா வாசிகளை ஈர்க்கிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள், பயணிகளின் சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என்று கூறும் அளவுக்கு இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது.

காணும் இடம் எங்கும் பச்சைப் புல்வெளி போர்த்தியதுபோல மலைகள், பள்ளத்தாக்குகள், வண்ண வண்ண பூக்களாய் பூத்துக் குலுங்கி இருக்கும் பூந்தோட்டங்கள், மலைகள் என்று மணிப்பூர் மாநிலத்தை ‘இந்தியாவின் அணிகலன்’ என்று கூறுகின்றனர். பாரம்பரியம், கலாச்சாரம், விளையாட்டு என்று பண்டைய கால வரலாற்றை இன்றும் மாறாமல் பின்பற்றும் மணிப்பூரின் தலைநகர் இம்பாலுக்கு மற்றொரு பெருமையும் உண்டு. ஆசியாவின் மிகப்பெரிய, பெண்கள் மட்டுமே நடத்தும்மிகப்பெரிய சந்தை இம்பாலில் 500 ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இமா கெயித்தேல், அதாவது அம்மாக்களின் சந்தை! இந்த மார்க்கெட் மூன்று கட்டங்களாக, 3.5 கிலோமீட்டர் பரப்பளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இமா கெயித்தேல் – வரலாறு

மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பால் இன் ஹார்ட் ஆஃப் தி சிட்டி சிட்டி என்று கூறப்படும் முக்கிய இடத்தில் 500 ஆண்டுகளாக என்ற இந்த சந்தை நடைபெற்று வருகிறது. சரி எல்லா ஊர்களிலுமே சந்தை இருக்கும், இதில் என்ன ஸ்பெஷல் என்று நீங்கள் நினைக்கலாம்! இமா கெயித்தேல் என்பது பெண்களால் மட்டுமே நடத்தப்படும் சந்தையாகும். பெண்களுக்கு வீட்டு வேலை என்பது தான் பிரதானம் என்பது மாறி, மிகப்பெரிய சந்தையை பெண்கள் மட்டுமே நிர்வகிக்கின்றனர் என்பது மிகவும் சிறப்பானது.

இந்த சந்தை தொடங்குவதற்கு மிகப்பெரிய வரலாற்றுக் காரணம் ஒன்றும் இருக்கிறது. மணிப்பூர்ளில் உள்ள மெய்த்தே என்ற பிறந்த ஆண்கள் அனைவருமே ராணுவத்திற்கு பணியாற்ற வேண்டும் என்ற எழுதப்படாத ஒரு சட்டம் இருந்தது. எனவே எல்லா ஆண்களுமே ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டுமென்பதால் பெண்கள் மற்ற துறைகளை எடுத்துக்கொண்டார்கள்.

ஆண்கள் இருக்கும் ராணுவத்தை தவிர்த்து, மத்த எல்லா இடங்களிலுமே பெண்கள் ஒரு குழுவாக இயங்கி, உள்ளூர் சந்தையாக மாற்றி, 500 ஆண்டுகளுக்கு மேல் மிக தொடர்ச்சியாக நடத்திக்கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் சாதாரண சின்ன சின்ன வேலைகள் செய்வது என்பதைத் தவிர்த்து, பெண்கள் தொழில் முனைவோராக வெற்றிகரமாக பல நூற்றாண்டாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதை மணிப்பூரி பெண்களையும், இந்த சந்தை மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் சந்தையானாலும் விதிமுறைகள் உண்டு

எங்கு வேண்டுமானாலும், எந்தப் பெண் வேண்டுமானாலும் கடை வைக்கலாம், சந்தையில் பங்கு கொள்ளலாம் என்று நினைக்க முடியாது. பெண்கள் இங்கு வைத்திருக்கும் கடைகளுக்கு உரிமம் பெற்று தான் நடத்த வேண்டும். கிட்டத்தட்ட 5000 பெண்கள் உரிமம் பெற்று தலைமுறை தலைமுறையாக சந்தையில் கடைகள் வைத்து வருகிறார்கள்.

பெண்கள் நடத்தும் மிகப்பெரிய சந்தையாக இருந்தாலுமே, திருமணமான பெண்களுக்கு மட்டும் தான் இங்கு சந்தை அல்லது வணிகம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. திருமணமான பெண்கள் சந்தையில் கலந்து கொள்வதற்கு அவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. வணிகம் நடத்தி, அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் கடனை திருப்பி செலுத்தலாம். இதை ஒரு பெண்கள் சங்கம் மூலம் நிர்வாகம் செய்கிறார்கள்.

பெண்கள் விற்பனை செய்யும் இந்த சந்தையில் நாளொன்றுக்கு 6000 – 10,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஆண்கள் இங்கு வணிகம் செய்வதற்கு அனுமதி கிடையாது, அவர்கள் ஷாப்பிங் மட்டுமே செய்யலாம். காய்கறிகள், பழங்கள், ஆடைகள், பொம்மைகள், மசாலா பொருட்கள், பாத்திரங்கள் என்று எல்லா பொருட்களுமே இந்த மார்க்கெட்டில் கிடைக்கும்.

இது பெண்கள் தொழில் முனைவோராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கும், தங்களுக்கென்று வருமானத்தை ஈட்டி சுயமாக வாழ்வதற்குமான ஒரு வழியாக இருக்கிறது. அதே போல, உள்ளூர் வாசிகளுக்கு இந்தச் சந்தை மிக முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.

Published by:Vijay R
First published:

Tags: Trends, Viral