19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மனைவிகளுக்குப் பரிசளித்த ஏழை நாட்டு அரசர்..!

1986-ம் ஆண்டு அரசராக முடிசூட்டப்பட்ட மிஸ்வாட்டி 3, அன்றைய சூழலில் உலகின் மிகவும் இளம் அரசர் ஆக அறியப்பட்டவர்.

19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மனைவிகளுக்குப் பரிசளித்த ஏழை நாட்டு அரசர்..!
ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்
  • News18
  • Last Updated: November 19, 2019, 3:35 PM IST
  • Share this:
மிகவும் ஏழ்மையான நாடாக அறியப்படும் ஸ்வாசிலேண்ட் நாட்டின் அரசர் தன் மனைவிகளுக்காக 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களைப் பரிசாக அளித்துள்ளார்.

சுமார் 175 கோடி ரூபாய் மதிப்பிலான 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை தனது மனைவிகளுக்காகப் பரிசளித்துள்ளார். தென் ஆப்ரிக்கா நாடுகளுள் ஒன்றான ஸ்வாசிலேண்ட் மிகவும் ஏழை நாடாகக் கருதப்படுகிறது. அந்நாட்டின் அரசர் மிஸ்வாட்டி -3 தனது மனைவிகளுக்கு அளித்த பரிசு சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அரசருக்கு மொத்தம் 15 மனைவிகள். இவர்களுக்காக 4 ட்ரக்குகளில் 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அந்த சிறிய வறுமையின் பிடியில் சிக்கியுள்ள நாட்டிற்குள் வந்திறங்கியுள்ளது. அரசரின் இச்செயல் மிகவும் வேதனை அளிப்பதாக தென் ஆப்ரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம்தான் தனது 23 பிள்ளைகளுக்காக 20 மெர்சிடிஸ் Maybach Pullman கார்கள், 62 Maybach கார்கள் மற்றும் ஒரு பிஎம்டபிள்யூ காரை இந்த அரசர் ஆர்டர் செய்து டெலிவரி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 18 வயதில் 1986-ம் ஆண்டு அரசராக முடிசூட்டப்பட்ட மிஸ்வாட்டி 3, அன்றைய சூழலில் உலகின் மிகவும் இளம் அரசர் ஆக அறியப்பட்டவர்.

மேலும் பார்க்க: 150 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்... மூழ்கும் வெனிஸ் நகரம்..!
First published: November 19, 2019, 3:35 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading