Home /News /trend /

நேருக்குநேர் மோதும் சிங்கம், ராஜநாகம்.. வன அரசர்களின் சண்டையில் கொல்லப்பட்டது யார்? - வீடியோ

நேருக்குநேர் மோதும் சிங்கம், ராஜநாகம்.. வன அரசர்களின் சண்டையில் கொல்லப்பட்டது யார்? - வீடியோ

ராஜநாகம் - சிங்கம்

ராஜநாகம் - சிங்கம்

Lion vs KingCobra | காடுகளின் ராஜாவாக இருக்கும் இந்த இரண்டு அசுரர்களும் மோதும்இந்த வீடியோவில் இருவரும் பலமாக தாக்கி கொள்ளும் காட்சிகள் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சிங்கத்தை காட்டின் ராஜா என்றும், நாஜநாகம் பாம்புகளின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது. ஒன்று சக்தி வாய்ந்தது, மற்றொன்று அதிக விஷத்தன்மை கொண்டது. இந்த இரண்டு ஆபத்தான காட்டு ராஜாகளுக்கும் நேருக்கு நேர் வந்தால் என்ன நடக்கும்? இதை உணர்த்தும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த இரண்டு ஆபத்தான வன விலங்குகளும் நேருக்கு நேர் வந்து அவற்றுக்கிடையே சண்டை நடந்தது. இந்த சண்டையில் யார் ஜெயித்தார்கள், சண்டை எப்படி முடிந்தது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.

    இந்த இரண்டு ஆபத்தான விலங்குகள் காட்டில் இருக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விலங்குகள் மற்ற விலங்குகளைத் தாக்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் காடுகளின் ராஜாவாக இருக்கும் இந்த இரண்டு அசுரர்களும் மோதும்இந்த வீடியோவில் இருவரும் பலமாக தாக்கி கொள்ளும் காட்சிகள் உள்ளது.

    Also Read : உலகிலேயே மிகப்பெரிய சிலந்தி பற்றி ஆச்சர்யப்பட வைக்கும் உண்மைகள்!

    இந்த வீடியோ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில் வருவது போல, சிங்கங்களின் குடும்பம் ஆரம்பத்தில் காணப்படுகிறது. ஒரு ஆபத்தான ராஜநாகம் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு ராஜநாகம் தங்களைத் தாக்கும் அபாயத்தைப் பற்றி குடும்பத்தினருக்குத் தெரியாது. படிப்படியாக ராஜநாகம் சிங்கங்களை நெருங்கி வந்து தாக்குகிறது. இந்த வீடியோவில் சில சிங்கங்கள் காயம் அடைந்திருப்பதையும் காணலாம்.



    இறுதியாக, ஒரு சிங்கத்திற்கும் இந்த ராஜநாகத்திற்கும் இடையே ஒரு மோசமான சண்டை காணப்படுகிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பெரும் சண்டை. கடைசியாக ராஜநாகம் சிங்கத்தை அடித்து தரையில் தள்ளுகிறது. அதேபோல் ராஜநாகத்தையும் சிங்கம் தாக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்த வீடியோவின் முடிவில் சரியாக என்ன நடந்தது, சண்டையில் வென்றவர் யார் என்று காட்டப்படவில்லை. ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இந்த சண்டையில் எந்த ராஜா வெற்றி பெற்றார்கள் என்ற உங்களின் கருத்துகளை ஷேர் செய்யலாம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி