சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் வலம்வரும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இந்தாண்டு தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்பட்டது. அதனால், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் பரவியது.
ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு சில முறை பொதுவெளியில் தோன்றிய கிம் ஜோங் உன், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விமர்சகர்களுக்கும், தனது எதிரிகளுக்கும் பதிலடி கொடுத்தார். அப்போது சாவையே வென்றுவந்தவர் கிம் என கிண்டல் செய்யும் வகையில் இணையதளங்களில் மீம்ஸ்கள் பறந்தன.
இந்நிலையில், கிம் ஜோங் உன் தற்போது கோமா நிலையில் உள்ளதாக தென்கொரியாவின் மறைந்த அதிபர் கிம் டே-ஜங்கின் முன்னாள் உதவியாளரான Chang Song-min தெரிவித்துள்ளார். மேலும் கிம் ஜோங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜோங் நாட்டை வழிநடத்திவருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதே தகவலை தென்கொரிய உளவாளிகளும் அண்மையில் கூறியிருந்தனர்.
கிம் ஜோங் உன் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில், அதிகாரங்கள் பகுதியளவு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென வடகொரிய சட்ட வல்லுனர்களின் ரகசிய கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
கிம்மின் உடல் நிலை குறித்து தொடர்ந்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், இந்தாண்டு கிம் 4-வது முறை இறக்கிறார், 6-வது முறை இறக்கிறார் என சமூகவலைதளங்களில் மீண்டும் மீம்ஸ்கள், வீடியோக்களும் களைகட்டியுள்ளன.
வழக்கமாக கிம் ஜோங் உன்-ஐ அண்டர்டேக்கரோடு ஒப்பிடும் வீடியோக்களும் பகிரப்பட்டுவருகின்றன.
— frustratedProgrammer=true; (@BestIndTweets) May 13, 2020
உலக அரசியலில் துடிப்புடன் இயங்கிவந்த கிம் ஜோங் உன் கடந்த சில மாதங்களாக சகஜமாக பொதுவெளிக்கு வருவது குறைந்துவிட்ட நிலையில், அவரது உடல் நிலை குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்துகொண்டே உள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.