சமூக வலைத்தளங்களில் சில குறிப்பிட்ட பதிவுகள் ஒரு சில மணி நேரங்களிலே பலரை சென்றடைந்து விடும். இதற்கு முக்கிய காரணம் அந்த பதிவின் தரமும், அதை வழங்கி இருக்கும் விதமும் தான். அந்த வகையில் சில வீடியோக்கள், படங்கள், மீம்ஸ் போன்றவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சமீப காலமாக சிறிய அளவிலான பாடல் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.
அதன்படி சில வாரங்களாக வைரலாகி வந்த ஒரு துள்ளலான பாடல் தான் 'ஊ அண்ட்டவா மாமா' என்கிற தெலுங்கு பாடல். இந்த பாடல் தெலுங்கில் மட்டுமன்றி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடா போன்ற வேறு சில மொழிகளிலும் ரிலீஸ் ஆகியது. எல்லா மொழிகளிலும் அந்தந்த ரசிகர்களை அதிக அளவு இந்த பாடல் மக்களை கவர்ந்தது. குறிப்பாக தெலுங்கு மொழியில் மிகவும் வைரலான் பிறகு, தமிழ் மொழியில் ஆண்டிரியா குரல் வழியாக இந்த பாடல் 'ஓ சொல்றியா மாமா' என்கிற வரிகளோடு வெளியானது. இது தெலுங்கு வெர்ஷனை விடவும் பலராலும் பாராட்டப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் ஆண்டிரியாவின் வசீகரமான குரல் தான்.
இந்த பாடலை இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் செய்துள்ளனர். அவற்றில் மிக சில ரீலிஸ் மட்டுமே இந்த பாட்டை போன்றே மிகவும் பிரபலமாகி வந்தது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் புகழ் கிலி பால் அவர்களும் 'ஊ அண்ட்டவா மாமா' தெலுங்கு பாடலுக்கு சிறப்பாக நடனமாடி உள்ளார். இவர் தான்சானியா நாட்டை சேர்ந்தவர். இது போன்று பல பாடலுக்கு இவர் ரீலிஸ் செய்துள்ளார். தற்போது இந்த ரீலிஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
இதில் கிலி பால் சிறப்பாக நடனமாடி உள்ளார். அவரின் டான்ஸ் மூவ்ஸ் அந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வேறு ஒரு நாட்டை சேர்ந்தவர் இந்த அளவிற்கு இந்திய பாடல் ஒன்றிற்கு அசத்தலாக நடனமாடுவார் என்பதை யாருமே எதிர் பார்க்கவில்லை. இந்த வீடியோவில் சமந்தா மற்றும் அல்லு அர்ஜுன் நடனமாடி இருப்பார்கள். அவர்களை போன்றே இவரும் அட்டகாசமான முறையில் நடனமாடி உள்ளார்.
இந்த வீடியோவை சுமார் 2.6 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் பலர் இந்த வீடியோவிற்கு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் "அற்புதமான நடனம் ப்ரோ' என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு நபர் "உங்கள் ஆட்டம் வேற லெவல், இந்தியாவில் இருந்து என்னுடைய அன்பு வணக்கங்கள்" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும் பலர் "சிறப்பான டான்ஸ் மூவிஸ் சார்" என்று பதிவிட்டு வருகின்றனர். இவர்களில் பலர் கிலி பாலின் தீவிர ரசிகர்கள் என்பதை அவர்களின் கமெண்ட்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.