பள்ளியில் தயாரிக்கப்பட்ட ‘இயர் புக்’ - சும்மா ஸ்டைலா, கெத்தா போஸ் கொடுத்த குட்டீஸ்.!
பள்ளியில் தயாரிக்கப்பட்ட ‘இயர் புக்’ - சும்மா ஸ்டைலா, கெத்தா போஸ் கொடுத்த குட்டீஸ்.!
School Students
Trending | பள்ளி ஒன்றில் ‘இயர் புக்’ தயாரிப்பதற்காக சின்னஞ்சிறு மாணவ, மாணவிகளிடம் ஃபோட்டோ எடுத்த போது, குழந்தை ஒன்று எப்படி போஸ் கொடுத்தது என்பதே தற்போது இணைய உலகின் பேச்சாக அமைந்துள்ளது. குறிப்பாக, டிவிட்டரில் இந்தப் பதிவு ஒரு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிவிட்டர் பதிவாளர் டோரா மிலா ஜே என்பவர், தனது டிவிட்டர் பக்கத்தில் உறவுக்கார சிறுமி குறித்த பதிவை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “எனது உறவுக்கார சிறுமி, மெலோடி. பள்ளியில் ‘பிக்சர் டே’ எப்படி போனது என்று அவரது அம்மா கேட்டபோது, “நீ பார்க்கத் தான போற’ என பதில் அளித்துள்ளார். பிக்சர் டே-யில் மெலோடியின் போஸ் இது’’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவுடன், மெலோடி போஸ் கொடுத்த ஃபோட்டோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
பின்னர், தன் பதிவின் கீழ் அவர் எழுதியுள்ள கமென்டில், “அனைவருக்கும் நன்றி. மெலோடிக்கு 7 வயது ஆகிறது. இந்தப் ஃபோட்டோவே எல்லாவற்றையும் பேசுகிறது. தான் யார் என்பதும், நான் அவளை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதும் மெலோடிக்கு தெரியும்’’ என்று கூறியுள்ளார்.
இந்தப் பதிவை சுமார் 3 லட்சத்து 91 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட டிவிட்டர் பயனாளர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இதேபோல பிக்சர் டே-யில் பங்கேற்ற தங்கள் குழந்தைகள் அல்லது உறவுக்கார குழந்தைகளின் ஃபோட்டோக்களை அவர்கள் பகிர்ந்து வருகின்றனர். தண்ணீரில் இருப்பதைப் போல எப்போதுமே வித்தியாசமாக காட்சியளிக்கக் கூடியவர்கள் குழந்தைகள் என்று கெய்ஷ் என்ற டிவிட்டர் பதிவாளர் கூறியிருக்கிறார்.
ஜோஷ் காட் பூஸ்டட் என்ற டிவிட்டர் பதிவாளர் வெளியிட்டுள்ள பதிவில், “என் மகனும் இதையே தான் செய்தான். இது மட்டுமல்லாமல், எனது பாட்டியின் 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில், என் மகன் தனது ஃபோட்டோவை மாமா-க்களிடம் விற்பனை செய்யும் முயற்சியையும் மேற்கொண்டான்’’ என்று கூறியுள்ளார்.
My son did the same thing. Then he tried selling copies to his uncles at my grandmother's 90th birthday party. pic.twitter.com/xXPpL4pqc4
ஜோ என்ற டிவிட்டர் பதிவாளர், பார்ப்பதற்கு பட்டாம்பூச்சி போல அழகாக காட்சியளிக்கும் தன் மகளின் ஃபோட்டோவை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, இரு கைகளையும் குவித்து ஹார்டின் போல வைத்துக் கொண்டு அந்தக் குழந்தை போஸ் கொடுப்பது அனைவரையும் கவருவதாக அமைந்துள்ளது.
ஒரு சில பதிவாளர்கள், தாங்கள் சின்ன வயதில் பள்ளியில் படித்த போது எடுத்துக் கொள்ளப்பட்ட ஃபோட்டோக்களை பதிவிட்டு, கடந்த கால நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். டிவிட்டர் பதிவாளர் ஒருவர், “நாமெல்லாம் இப்போது 2022-இல் இருக்கிறோம். மெலோடியைப் போலவே நமக்கும் தன்னிம்பிக்கை மற்றும் நெஞ்சுரம் வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். மெலோடி மட்டுமல்லாமல், இந்தப் பதிவில் பகிரப்படும் அனைத்து குழந்தைகளின் ஃபோட்டோக்களுமே “சும்மா ஸ்டைலா, கெத்தா’’க இருக்கின்றன.
Published by:Selvi M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.