ஒரு நிமிடத்தில் 230 ஜம்ப்... கின்னஸ் சாதனை படைத்த மின்னல் வேக ஸ்கிப்பிங் - வீடியோ

ஒரு நிமிடத்தில் 230 ஜம்ப்... கின்னஸ் சாதனை படைத்த மின்னல் வேக ஸ்கிப்பிங் - வீடியோ

வைரல் வீடியோ

ஸ்கிப்பிங்கில் ஒரு நிமிடத்தில் 230 முறை குதித்த ஜப்பான் குழுவின் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

  • Share this:
சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஒரு சில வீடியோக்கள் திடீரென வைரலாகும். அதைப்போலவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு பக்கத்தில், ஜப்பான் குழு ஒன்று மின்னல் வேகத்தில் ஸ்கிப்பிங் செய்யும் வீடியோவை பகிர்ந்திருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. ஆனால், அந்த வீடியோ, கடந்த 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. 

சிசூகா பகுதியைச் சேர்ந்த ஈ ஜம்ப் புஜி குழு எடுத்துள்ள அந்த வீடியோவில், அந்த குழுவைச் சேர்ந்த சிறுவர்கள் ஒரு நிமிடத்தில் 230 முறை குதித்து ஸ்கிப்பிங் செய்கின்றனர். இதனை ரசித்துள்ள இணையவாசிகள் ஜப்பான் குழுவின் முயற்சிக்கு கின்னஸ் ரெக்கார்டு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 14 பேர் கொண்ட குழுவில் 2 பேர் கயிற்றை வேகமாக சுழற்றுகின்றனர். மீதமிருக்கும் 12 பேர் வரிசையாக கயிற்றை தாண்டி செல்வது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதுவரை 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் இந்ந வீடியோ பெற்றுள்ளது.

 

 
2013 ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஹிரோமி பள்ளிக் குழந்தைகள் ஒரு நிமிடத்தில் 217 முறை ஸ்கிப்பிங் செய்தது சாதனையாக இருந்து வருகிறது. தனிநபரில் ஜப்பானின் டோக்கியோ நகரில் வசித்து வரும் ஹைஜிகி இகுயாமா 30 விநாடியில் 26 முறை ஸ்கிப்பிங் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை அவர் 2018 ஆம் ஆண்டு செய்தார். ஸ்கிப்பிங் விளையாட்டு ஜப்பானில் மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது. 

டபுள் டச் ஸ்டைலில், 30 விநாடியில் அதிகமுறை ஸ்கிப்பிங் செய்து பெண் ஒருவரும் சாதனை படைத்துள்ளார். வெலோட்ரோம்  பகுதியில் உள்ள 3 பேர் கொண்ட குழு ஒன்று 30 விநாடியில் 129 முறை ஸ்கிப்பிங் செய்தனர். இதனை கின்னஸ் உலக சாதனைக்காக அந்த குழு பரிந்துரைத்தது. அப்போது, கின்னஸ் சாதனையை முடிவு செய்பவராக இருந்த கவுரு இஷிகாவா குழுவின் ஸ்கிப்பிங் வீடியோவை முழுமையாக ஆய்வு செய்தார். 

தாங்கள் கின்னஸ் சாதனை புரிவோம் என நம்பிக்கையாக இருந்த அந்த குழுவுக்கு, கின்னஸ் குழுவும் சாதனை சான்றிதழை வழங்கி கவுரவித்தது. இதுகுறித்து பேசிய ஆயூமி , இந்த சாதனைக்காக தங்கள் குழு பல நாட்களாக கனவு கண்டதாகவும், அது இப்போது நிறைவேறியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். தங்களின் சாதனை நிச்சயமாக, சாதிக்க துடிக்கும் மற்றவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

 

 
Published by:Tamilmalar Natarajan
First published: