Home /News /trend /

டிக்கெட் இல்லாமல் விமானத்தில் சிறுவன் தன்னந்தனியாக 2700 கிலோமீட்டர் பயணம்!

டிக்கெட் இல்லாமல் விமானத்தில் சிறுவன் தன்னந்தனியாக 2700 கிலோமீட்டர் பயணம்!

வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்

வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்

சிறிய வயதில் நமக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போய்விடுவேன் என்று அடிக்கடி கூறி வருவோம். 

குழந்தை பருவத்தில் நாம் பலவித சேட்டைகளை செய்திருப்போம். அவற்றில் சில நிச்சயம் நமது பெற்றோர்களை கோபம் கொள்ள செய்திருக்கும். குழந்தையாக இருக்கும் போது நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நம்மை அறியாமலே செய்தவையாக இருக்க கூடும். நம்மை அறியாமல் செய்த விஷயங்கள் பலருக்கும் சங்கடத்தை தருபவையாக கூட இருந்திருக்கலாம். சிறிய வயதில் நமக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போய்விடுவேன் என்று அடிக்கடி கூறி வருவோம்.

ஆனால், உண்மையில் இது போன்று நாம் செய்திருக்க மாட்டோம். காரணம், இப்படி செய்தால் நாம் தொலைந்து விடுவோம் என்கிற பயம் அதிகம் இருக்கும். இவை அனைத்தையும் தாண்டி ஒரு சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி, தன்னந்தனியாக 2700 கிலோ மீட்டர் சுற்றி திரிந்துள்ளான். அதுவும் டிக்கெட் இல்லாமலே விமானத்தில் சுற்றி வந்துள்ளான். இந்த செய்தியை படிக்கும் பலருக்கும் மிக வியப்பாக இருக்கும். ஆனால், இது உண்மையில் நடந்த சம்பவமாகும்.

இமானுவல் மார்க்கஸ் டி ஒலிவைரா என்கிற 9 வயது சிறுவன் தான் இந்த மாபெரும் காரியத்தை செய்துள்ளான். வீட்டை விட்டு வெளியேறிய தினத்தில் இந்த சிறுவனின் தாய் காலையில் 7.30 மணிக்கு அங்கு சென்று பார்த்த போது அந்த சிறுவன் அங்கு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் அவரது தாய் மிகவும் பயந்துள்ளார். அதன் பிறகு இது குறித்து போலீஸிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

உடனே அந்த சிறுவனை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர். இதற்கிடையில் இந்த 9 வயது சிறுவன் எந்த டிக்கெட்டும் இல்லாமல் விமானத்தில் ஏறி 2700 கிலோ மீட்டர் வரை பயணம் செய்துள்ளான். இதை செய்வதற்கு அவனுக்கு அதிக துணிச்சலை தந்தது இன்டர்நெட் தான். ஆம், விமானத்தில் டிக்கெட் இல்லாமலே யாருக்கும் தெரியாமல் எப்படி பயணிப்பது என்பதை அந்த சிறுவன் இன்டர்நெட் வழியாக தெரிந்து கொண்டுள்ளான்.

இதையும் படியுங்கள் :  உபியில் 57 தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

அதை செய்து பார்க்கும் விதமாக தான் இப்படி வீட்டை விட்டு வெளியேறி டிக்கெட் இல்லாமல் இவ்வளவு தூரம் பயணித்துள்ளான். நல்ல படியாக இந்த சிறுவனை ஒரு விமான நிலையத்தில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர். அப்போது அவர் இருந்த இடமானது அந்த சிறுவனின் நாட்டில் இருந்து மறுபக்கம் உள்ள நாடாகும். கேமரா மற்றும் இதர தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த சிறுவனை கண்டுபிடித்து உள்ளனர். பிறகு இது குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.

இன்றைய காலத்து குழந்தைகள் மற்றவர்களின் உதவி இல்லாமலேயே பல விஷயங்களை சாதாரணமாக செய்து விடுகின்றனர். ஆனால், அவற்றில் பல்வேறு விஷயங்களும் ஆபத்தாக முடியும். குறிப்பாக குழந்தைகளுக்கு இன்டர்நெட்டை சரியாக கையாள சொல்லி கொடுப்பது அவசியம். இல்லையேல் அது அவர்களின் வாழ்க்கை முறையில் பல பிரச்சனைகளை உருவாக்க கூடும். இதற்கு இந்த சிறுவனின் கதை சிறந்த உதாரணமாகும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Kids

அடுத்த செய்தி