Home /News /trend /

இரண்டு மாதங்களுக்குப் பிறகு பாட்டியை சந்தித்த குழந்தை - முகத்தில் தெரியும் பூரிப்பை பாருங்கள்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு பாட்டியை சந்தித்த குழந்தை - முகத்தில் தெரியும் பூரிப்பை பாருங்கள்

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

எந்தவித கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் எதுவும் இன்றி குழந்தைகளிடம் அன்பு செலுத்தக் கூடிய உறவுகள் தாத்தா பாட்டி தான். எத்தனை வயது ஆனாலும், பேரக் குழந்தைகளை பார்க்கும் போது அவர்களே கூட குழந்தையாய் மாறி விடுகின்றனர்.

    குடும்ப உறவுகளுக்கு இடையிலான நெகிழ்ச்சிகரமான சந்திப்புகளை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் ஏராளமான உறவுகள் இருக்கின்றன. தாயின் அன்பு, தந்தையின் அரவணைப்பு என குழந்தைகள் கொண்டாடுவதற்கு உரிய முதல் உறவுகள் அவர்கள் தான். ஆனால், தாய், தந்தையரிடம் இந்த அன்பு மற்றும் அரவணைப்புடன் கண்டிப்பும் சேர்ந்தே இருக்கும்.

    அதே சமயம், எந்தவித கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் எதுவும் இன்றி குழந்தைகளிடம் அன்பு செலுத்தக் கூடிய உறவுகள் தாத்தா பாட்டி தான். எத்தனை வயது ஆனாலும், பேரக் குழந்தைகளை பார்க்கும் போது அவர்களே கூட குழந்தையாய் மாறி விடுகின்றனர். குறிப்பாக தாத்தா, பாட்டியை உறவு முறையில் அழைக்காமல், குழந்தைகள் செல்லமாக பெயர் சொல்லி அழைப்பதும், அவர்களிடம் சண்டையிடுவதும் அற்புதமான காட்சிகளாக இருக்கும்.

    நாமும் கூட சின்ன வயதில் தாத்தா, பாட்டியின் வீட்டுக்கு செல்வது என்றால் எல்லை இல்லாத மகிழ்ச்சிக்கு சென்று விடுவோம். விடுமுறை பொழுதுகளை அவர்களுடன் கழிப்பது நமக்கு எல்லையில்லா ஆனந்தத்தை கொடுக்கும். தாத்தா, பாட்டியை நீண்ட பிரிவுக்கு பிறகு நாம் சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை அளவிடுவதற்கு வார்த்தைகளே இருக்காது. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதுபோன்ற வீடியோ ஒன்று வலம் வருகிறது.

    இந்த வீடியோவில் ஸ்டெல்லா என்ற குழந்தை உயரமான சேரில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அப்போது பாட்டி தங்கள் வீட்டுக்கு வந்திருப்பதை குழந்தை கவனித்ததும் ஒரு கனம் திகைத்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அடுத்த சில நொடிகளில் பாட்டியும், குழந்தையும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் போது அவர்கள் இருவரது முகத்திலும் ஆனந்தம் பொங்குகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by V.Nanaba RN, BSN 🇬🇭 (@v.dayyy)






    இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் சில நாட்களுக்கு முன்பாக வெளியான இந்த வீடியோ எண்ணற்ற மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக சுமார் 2.1 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளை இது எற்றுள்ளது. வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரும் பலவிதமான கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர்.

    நெட்டிசன்களின் வாழ்த்து மழை

    நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “நம் வீட்டுக்கு யார் வந்திருக்கிறார்க எனக்கு தெரியும். அது எங்கள் பாட்டி’’ என சிந்திப்பதை போல குழந்தையின் முக பாவனை இருக்கிறது. பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது என்று கூறியுள்ளார். நிச்சயமாக குழந்தை சேரை விட்டு குதித்து, பாட்டியை கட்டிப்பிடித்திருக்கும் என்று மற்றொரு பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு நபரின் கமெண்டில், “நான் என்னுடைய குழந்தைகளை நேசிக்கிறேன். ஆனால், இதுபோன்ற பேரக் குழந்தைகளை பாருங்கள். கடவுள் நிச்சயமாக கருணை மிகுந்தவர். இது வேற லெவல் அன்பு கொண்ட விஷயம். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையிலும் இதுபோன்ற கியூட்டான விஷயத்தை நான் பார்த்தது இல்லை என்று மற்றொருவர் கூறியுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trending Video, Viral Video

    அடுத்த செய்தி