• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ’Be Happy’ நோயாளிகளுக்கு சிறுவனின் ஆறுதல் வார்த்தைகள் - வைரலாகும் புகைப்படம்!

’Be Happy’ நோயாளிகளுக்கு சிறுவனின் ஆறுதல் வார்த்தைகள் - வைரலாகும் புகைப்படம்!

நோயாளிகளுக்கு சிறுவனின் ஆறுதல் வார்த்தைகள்

நோயாளிகளுக்கு சிறுவனின் ஆறுதல் வார்த்தைகள்

முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், 2வது அலை பெரும் பொருளாதார இழப்பையும்

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா நோயாளிகளுக்காக தாய் தயார் செய்த உணவுப் பொட்டலங்களின் மீது Be Happy என சிறுவன் எழுதும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சார்ஸ் கோவிட் 2 வைரஸின் உருமாறிய வடிவம் நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், 2வது அலை பெரும் பொருளாதார இழப்பையும், குடும்பச் சூழலையும் தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத வைரஸ் காற்றின் வழியாக பரவுவதால், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுதை கண்டு பிடிக்க முடியாத நிலை உள்ளது.

ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடுமையாக பின்பற்றுபவர்கள் கூட 2வது அலை கொரோனா தாக்கத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் கொரோனாவுக்கு பலியாகியிருக்கின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த நிலையே உள்ளது.

இந்தியாவில் 2வது அலை மிகப்பெரிய சுனாமியாக மாறியதற்கு காரணம், முதல் அலையில் இருந்து வெற்றிகரமாக மீண்டபிறகு, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அடுத்த அலையை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளை முன்னெடுக்காமல் இருந்தது சுட்டிக்காட்டப்படுகிறது. தடுப்பூசிகளை விரைவாக மக்களுக்கு செலுத்தியிருக்க வேண்டும், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியிருக்கக்கூடாது என கூறும் தொற்றுநோய் துறை நிபுணர்கள், தடுப்பூசியை விரைவாக அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது மட்டுமே இப்போது இருக்கக்கூடிய வழி எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Also read... கோவிட்-19: நீண்ட வேலை நேரம், கண்முன் உயிருக்கு போராடும் நோயாளிகள்... மனஅழுத்ததில் தவிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பெரும்பாலானோருக்கு மருத்துவ சிகிச்சையுடன், உணவு உள்ளிட்டவையும் தேவைப்படுகின்றன. அலை அலையாக மருத்துவமனையில் காத்திருக்கும் மக்களுக்கு மனிதநேயமிக்கவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், கொரோனா நோயாளிகளுக்காக பெண் ஒருவர் உணவு தயாரித்து பொட்டலமாக செய்து வீட்டில் அடுக்கி வைத்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அவருடைய மகன், உணவுப் பொட்டலங்களின் மீது Be Happy என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை எழுதியுள்ளார். மனம்சோர்ந்து கவலையுடன் இருக்கும் மக்களுக்கு இந்த வார்த்தைகள் ஆறுதலாக இருக்கும் என உணர்ந்து சிறுவன் எழுதும் இந்தப் புகைப்படம் டிவிட்டரில் வெளியாகியுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெட்டிசன்கள் சிறுவனின் புகைப்படத்தை லைக் செய்து, அவரின் மனிதநேயத்தை பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர். நெட்டிசன் ஒருவர், சிறுவனின் எழுத்துக்கள் நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைத்து, நோயாளிகளுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும், So Cute, என பாராட்டியுள்ளார். மற்றொருவர், அன்பை விதைக்கும் சிறுவனுக்கு என்னுடைய மனமார்த்த வாழ்த்துகள், அவர் எண்ணம்போல் வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

மனக்கவலை மற்றும் கண்ணீருடன் இருப்பவர்களுக்கு சிறுவனின் இந்த வார்த்தைகள் பாசிடிவ் வைப்ரேஷனை உருவாக்கும் என தெரிவித்துள்ள நெட்டிசன்கள், சிறுவனுக்கும், அவரது பெற்றோருக்கும் தன்னுடைய அன்பை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: