Home /News /trend /

யார் இந்த "பகடி நாயகன்" காபி லேம்? 22 வயதில் இணையமே பேசும் நபரான கதை!

யார் இந்த "பகடி நாயகன்" காபி லேம்? 22 வயதில் இணையமே பேசும் நபரான கதை!

காபி லேம்

காபி லேம்

Khaby Lame story : காபி லேம் வெளியிட்ட வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவியதுடன் சிந்தனையை தூண்டும் விதமாகவும் அமைந்தது.

  டிக் டோக்கில் நுழைந்து இரண்டே ஆண்டுகளில் அதிக பாலோயர்களை கொண்ட நபராக காபி லேம் உருவெடுத்துள்ளார். ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்ட காபி லேம் தனது 22 வயதில் உலகின் மிக பிரபலமான நபராக மாறியது எப்படி? என்பதை பார்க்கலாம்.

  காய்கறி நறுக்குவது, குளிர்பானம் பருகுவது போன்ற அன்றாட பணிகளை வித்தியாசமாக செய்வது குறித்து தனிநபர்கள் வெளியிடும் வீடியோக்களை பகடி செய்து எளிமையான முறையில் அந்த பணிகளை செய்து முடிப்பது பற்றி செயல்முறை விளக்கத்துடன் வீடியோ வெளியிட்டு வருபவர் காபி லேம்.2000-ம் ஆண்டில் செனகல் நாட்டில் பிறந்த காபி லேம் தனது ஒரு வயதில் குடும்பத்துடன் இத்தாலி நாட்டிற்கு குடிபெயர்ந்தார். இத்தாலியில் மேல்நிலை பள்ளி படிப்பை முடித்ததும் குடும்ப வறுமை காரணமாக அங்குள்ள தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார்.

  ஸ்டம்புகளைத் தெறிக்கவிட்ட போல்ட்: பேர்ஸ்டோவின் சேவாக் பாணி காட்டடி சதம்- இங்கிலாந்து 265/6

  சிறு வயதில் இருந்தே இயல்பாக நகைச்சுவை உணர்வு கொண்ட இவர், கொரோனா காலத்தில் வேலையை இழந்ததும் யதேச்சையாக டிக்டோக்கில் கணக்கு தொடங்கி 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார்.எந்தவொரு வசனமும் இல்லாமல் தனது உடல்மொழி மூலம் ரசிகர்களுக்கு புரியும் விதமாக வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்ட காபி லேம் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி ஒரு கோடியே 70 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.

  400 விருந்தினர்கள் முன்னிலையில் நாய்களுக்கு நடந்த கோலாகல திருமணம்.. ஏன் தெரியுமா?

  விலை உயர்ந்த டெஸ்லா காரின் இருக்கையில் பாஸ்தா-வை கொட்டி சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியிட்டவரை கண்டிக்கும் விதமாக காபி லேம் வெளியிட்ட வீடியோ பாலோயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.வித்தியாசமான முறையில் பல் துலக்குவது, பாத்திரம் தேய்ப்பது, கோன் ஐஸ் சாப்பிடுவது, காரில் சிக்கிக் கொண்ட டி-ஷர்ட்டை எடுப்பது, உடல் பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களுக்கு மாற்றாக காபி லேம் வெளியிட்ட வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவியதுடன் சிந்தனையை தூண்டும் விதமாகவும் அமைந்தது.   
  View this post on Instagram

   

  A post shared by Khaby Lame (@khaby00)


  இனவெறி மிகுந்த சமூகத்தில் இனவறி இல்லாமல் இருப்பது மட்டுமின்றி இனவெறி எதிர்பார்ப்பாளராகவும் இருக்க வேண்டும் என்று காபி லேம் வெளியிட்ட பதிவு அவரது சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தியது.இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தண்ணீர் சேமிப்பு குறித்த வீடியோ ஒன்றை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அது காபி லேமின் உடல்மொழியை பிரதிபலிப்பது போன்று இருப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டனர்.

  இப்படி மிஸ்டர் பீன் போல தனது உடல் மொழியால் உலகம் முழுவதும் ரசிகர்களை கவரும் வகையில் வீடியோக்களை எடுத்து பதிவிட்டதால் காபி லேமை டிக்டோக் பக்கத்தில் பின் தொடர்பவர்களை எண்ணிக்கை 14 கோடியே 29 லட்சத்தை கடந்துள்ளது. இதன்மூலம் டிக்டோக்கில் அதிக பாலோயர்களை கொண்டவர்கள் பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த 18 வயது பெண் நடன கலைஞர் Charli D'Amelio வை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

  மேலும் இவரை இன்ஸ்டாகிராமில் 7 கோடியே 80 லட்சம் பேர் பாலோ செய்கின்றனர். இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு பதிவிற்கும் 15 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். காபி லேமின் சொத்து மதிப்பு 101 கோடியை கடந்துள்ளது. அதில், கடந்த ஒராண்டில் மட்டும் சுமார் 47 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இத்தாலியில் தனியாக வீடு வாங்க வசதி இல்லாதவர்களுக்கு என்று ஒதுக்கப்படும் சமூக வீடுகளில் வசித்து வந்த காபி லேம் தற்போது நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய ஆடம்பர மாளிகைக்கு குடிபெயர்ந்துள்ளார்.

  ஜீப், ஆடி RS-5, BMW X5 Mercedes G Wagon என நான்கு விதமான கார்களில் வலம் வந்து கொண்டுள்ளார். டிக் டோக்கில் குறுகிய காலத்திலேயே பிரபலமாகியுள்ள காபி லேம், விரைவில் ஹாலிவுட் திரையுலகில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: Trending, Viral

  அடுத்த செய்தி