• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • தினமும் 12 கி.மீ நடந்து சென்று கிராமங்களில் புத்தகங்களை வழங்கி வரும் "வாக்கிங் லைப்ரரியன்"!

தினமும் 12 கி.மீ நடந்து சென்று கிராமங்களில் புத்தகங்களை வழங்கி வரும் "வாக்கிங் லைப்ரரியன்"!

தினமும் 12 கி.மீ நடந்து சென்று கிராமங்களில் புத்தகங்களை வழங்கி வரும் "வாக்கிங் லைப்ரரியன்"!

தினமும் 12 கி.மீ நடந்து சென்று கிராமங்களில் புத்தகங்களை வழங்கி வரும் "வாக்கிங் லைப்ரரியன்"!

பி. சுகுமாரன் என்ற அந்த லைப்ரரியனை பொறுத்தவரை, இதனை ஒரு தன்னலமற்ற நோக்கத்துடன் செய்வதாகவும் இந்த பணிக்கு உண்மையாக இருப்பதாகவும் கூறினார்.

 • Share this:
  கேரளாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு தினமும் 12 கி.மீ நடந்து சென்று புத்தகங்களை வழங்கி வரும் ஒரு வாக்கிங் லைப்ரரியனை பற்றி தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம். பொதுவாக புத்தகம் படிக்க பலருக்கு பிடிக்கும். அதற்காக நிறைய பேர் தங்கள் வீட்டின் அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று படித்து வருவர். ஆனால் கேரளாவில் லைப்ரரியன் ஒருவர் தினசரி புத்தகங்களை பையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்தே சென்று கொடுத்து வரும் சம்பவம் மனதை நெகிழ வைக்கிறது.

  பி. சுகுமாரன் என்ற அந்த லைப்ரரியனை பொறுத்தவரை, இதனை ஒரு தன்னலமற்ற நோக்கத்துடன் செய்வதாகவும் இந்த பணிக்கு உண்மையாக இருப்பதாகவும் கூறினார். வாரத்தின் 6 நாட்களும் இரண்டு பையில் புத்தகங்களை நிரப்பி, கிட்டத்தட்ட 12 கி.மீ தூரம் நடந்து அலப்புழாவில் உள்ள கருவாட்டா மற்றும் குமாராபுரம் கிராம பஞ்சாயத்துகளில் இருக்கும் மக்களுக்கு அவற்றை வழங்கி வருகிறாராம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கேரள மாநில நூலக கவுன்சிலின் கீழ் உள்ள கருவாட்டா தெற்கில் உள்ள குமாரபுரம் பொது நூலகத்தில் சுகுமாரன் பணிபுரிந்து வருகிறார். அவர் 1979 இல் இப்பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் மிக விரைவில் ஒரு ‘வாக்கிங் லைப்ரரியன்’ என்ற பட்டத்தை பெற்றுள்ளார். அவரின் இந்த நடவடிக்கையே அப்பகுதி கிராம மக்களுக்கு புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. கடந்த நான்கு தசாப்தங்களில், படிக்கும் பழக்கத்தைப் கொண்ட மற்றவர்களுக்கு உதவுவதில் அவர் கொண்டிருந்த பக்தி அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தது.

  தனது கடந்த காலத்தைப் பற்றி தி இந்துவிடம் பேசிய சுகுமாரன், தான் ஒரு இளைஞனாக இருந்த போது ஒரு நியூஸ்பாயாக பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வேன் என்று தெரிவித்திருந்தார். மேலும், “நான் ஒரு நூலகராக வேலையை ஏற்றுக்கொண்ட போது, ​​பலர் நூலகத்திற்கு வருவதோ அல்லது புத்தகங்களை கடன் வாங்குவதோ இல்லை. அப்போதுதான் படிக்கும் புத்தகங்களுடன் வாசகர்களை நேரடியாக அணுக முடிவு செய்தேன்" என்று கூறினார்.

  அவர் வழங்கிய புத்தகங்களால் கிராமத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோருக்கு படிக்கும் பழக்கம் உருவாக வழிவகுத்ததாக சுகுமாரன் கூறினார். கருவாட்டாவில் வசிக்கும் சுகுமாரனுக்கு சைக்கிள் ஓட்டுவது எப்படி என்று தெரியவில்லை. இதனால் புத்தகங்களை வழங்க தினசரி கிட்டத்தட்ட 30 வீடுகளுக்கு நடந்து செல்ல முடிவெடுத்துள்ளார். அவர் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 1,000 புத்தகங்களை நடைபயணமாக சென்று வழங்கி வருகிறார்.

  இது குறித்து பேசிய அவர், கிராமத்தில் உள்ள சிலர், குறிப்பாக குழந்தைகள், புத்தகங்களைப் பற்றிய மதிப்புரைகளை எனக்குத் கொடுக்கிறார்கள்," என்று இன்முகத்துடன் கூறினார். தனது மனைவி மற்றும் 12 வயது ஆட்டிஸ்டிக் குழந்தையுடன் வசிக்கும் சுகுமாரன், நூலக கவுன்சிலிடமிருந்து ரூ.3,100 உதவித்தொகையும், புத்தக விற்பனையிலிருந்து கிடைக்கும் 30% கமிஷனுடனே தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நூலகராக தனது வாழ்வாதாரத்தைப் பற்றி பெருமைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

  Also read: நோய்வாய்ப்பட்ட மூதாட்டியை அன்பாக கட்டியணைத்த குரங்கு - வைரலாகும் வீடியோ!

  இதேபோன்ற ஒரு சம்பவத்தில் ராதாமணி கே.பி. என்பவர் சுமார் 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் எடுத்துக் கொண்டு, தனது கிராமத்தைச் சுற்றி அமைத்துள்ள வீடுகளில் உள்ள பெண்களுக்கு நூலக புத்தகங்களை விநியோகிக்கும் பணியை செய்து வருகிறார். அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தனது பணியை செய்து வருகிறார்.

  தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவர் தனது வேலையை தினசரி செய்யமுடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் கூட, அவரிடம் இருந்து புத்தகங்களைப் பெற்று வந்த மக்கள், ஊரடங்கு காலத்தில் புத்தகங்களை படிக்க வேண்டும் என்பதற்காக அவரது வீட்டிற்கு சென்று புத்தகங்களை கடன் வாங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த நூலகத்தில் சுமார் 102 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 94 பேர் பெண்கள் ஆவார்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Esakki Raja
  First published: