நாயை கட்டிவைத்து இரக்கமே இன்றி அடித்து கொன்ற சிறுவர்கள்...ட்ரெண்டாகும் #JusticeForBruno ஹேஷ்டேக் !

#JusticeForBruno

நாயை படகு ஒன்றில் தலைகீழாக தொங்கவிட்டு இரக்கமே இன்றி கட்டையால் அடித்தே சித்ரவதை செய்ததில் நாய் இறந்தே போனது.

 • Share this:
  கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வளர்ப்பு நாயை கட்டிவைத்து இரக்கமே இன்றி அடித்து கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என #JusticeForBruno என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகின்றது.

  அடிமலதுராவை சேர்ந்த கிறித்துராஜ் என்பவர் புரூனோ என்ற நாயை 8 வருடங்களாக வளர்த்து வந்தார். அவரது வீட்டின் வழியே செல்லும் போது நாய் குறைத்த காரணத்தால் சிறுவன் தனது நண்பர்களோடு சேர்ந்து படகில் நாயை கட்டி வைத்து கொடுரூரமாக தாக்கியுள்ளான்.

  நாயை படகு ஒன்றில் தலைகீழாக தொங்கவிட்டு இரக்கமே இன்றி கட்டையால் அடித்தே சித்ரவதை செய்ததில் நாய் இறந்தே போனது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. நாயை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தற்போது டிவிட்டரில் #JusticeForBruno என்ற ஹாஸ்டாக் டிரெண்டாகி வருகிறது.  இது தொடர்பாக நாயின் உரிமையாளர் கிறிஸ்துராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மேலும் கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: