Home /News /trend /

பயணம் செய்வதில் மோகம்... மளிகை கடை வருமானத்தில் வெளிநாடுகளுக்கு விசிட்.. உலகை சுற்றும் ”மோலி சேச்சி”!

பயணம் செய்வதில் மோகம்... மளிகை கடை வருமானத்தில் வெளிநாடுகளுக்கு விசிட்.. உலகை சுற்றும் ”மோலி சேச்சி”!

Molly Joy

Molly Joy

Traveler Molly Joy | மனசே சரியில்லப்பான்னு யாரிடமாவது சொன்னால், பெரும்பாலானவர்கள் உடனே சொல்வது, ”ஒரு long travel போய்ட்டு வா”…. என்பதாகவே இருக்கும்.

  கேரளாவின் இரும்பனத்தில் வசிக்கும் மோலியின் வாழ்க்கையை சில வார்த்தைகளில் சுருக்கமாகச் சொன்னால் இப்படித்தான் இருக்கும் – ”பத்து ஆண்டுகளில் 11 நாடுகள்”. தற்போது 61 வயதாகும் மோலி சேச்சிக்கு, பொன்விழாவைக் கொண்டாடும் 50 வயதைக் கடந்த பின்னர் தான், இது சாத்தியமாகி இருக்கிறது.

  சித்ரபுழா என்ற ஊரில் ஒரு சாதாரண மளிகைக் கடையின் உரிமையாளரான மோலி சேச்சி, கடந்த பத்தாண்டுகளில் பதினொரு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அவர் தனது உல்லாசப் பயணங்களுக்காக இதுவரை 10 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளார். இதில் பெரும்பகுதியை அவர் தனது பகுதியில் லுலு மால் என்று பிரபலமாக அறியப்படும் மளிகைக் கடையை நடத்தி சம்பாதித்துள்ளார்.

  மோலி நடத்துவது ஒரு மளிகைக் கடை தான் என்றாலும், அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் அதை லுலு மால் என்றே அழைக்கின்றனர். காரணம், இவரது கடையில் நீங்கள் எந்தவொரு பொருளும் இல்லை என்று திரும்பி வர முடியாது. இந்த மளிகைக்கடையை 26 ஆண்டுகளுக்கு முன்பு மோலியும் அவரது கணவரும் சேர்ந்தே அமைத்தனர்.  18 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் இறந்துவிட, தனியாக கடையை நடத்தி வந்த மோலிக்கு, தனது அக்கம்பக்கத்தினர் கேரளாவை விட்டு வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதைப் பார்த்துதான், நாமும் இப்படி பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் துளிர்விட்டது.

  Also Read : போட்டிக்கு நீங்களும் வரலாம்..! 8 கிலோ சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.51,000 பரிசு

  இதையடுத்து, மோலி சேச்சி, பழனி, ஊட்டி, கொடைக்கானல், மைசூரு போன்ற இடங்களுக்குச் சென்றார். இதெல்லாம் 2010ம் ஆண்டுக்கு முன்பு, பயணத்தின் சுவையை விரும்பிய மோலி, தனது சிறகுகளை மேலும் விரிக்க விரும்பினார். இதையடுத்து, அவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார். 2012ல், தனது முதல் சர்வதேச விமானத்தில் ஏறினார்.

  திருவனந்தபுரத்தில் பிறந்த மோலி, தனது பள்ளிக்கால நினைவுகள் குறித்து இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார், “நான் பள்ளியில் படிக்கும் போது, ​​என்னை சுற்றுலா அனுப்பி வைப்பதற்கு என் பெற்றோரிடம் போதிய பணம் இல்லை. இப்போதும் என்னிடம் நிறைய பணம் எல்லாம் இல்லை, ஆனால் பயணம் செய்து இந்த உலகை ரசிக்க வேண்டும் என்ற எனது தீவிர ஆசை, எப்படியோ சிரமப்பட்டு பணம் சேர்க்க தூண்டுகிறது” என்கிறார்.  "எனது முதல் விமானப் பயணத்தை நான் மிகவும் ரசித்தேன், நான் வாழ்க்கையில் ஒரு முறையாவது இங்கு வருவேன் என்று, கனவில் கூட நினைக்காத இடங்களைப் பார்வையிட்ட பிறகு தான், இந்த உலகம் எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்தேன்" எனும் மோலி சேச்சியின், முதல் வெளிநாட்டுப் பயணம் ஐரோப்பாவுக்கான 10 நாள் சுற்றுலாப் பயணமாக இருந்தது.

  Also Read : விஷ தோட்டம்.. இந்த கார்டனில் உள்ள எந்த தாவரத்தையும் தொடவோ, நுகரவோ அனுமதியில்லை - ஏன் தெரியுமா.?

  பயணம் செய்ய வேண்டும் என்ற அவரது ஆசையை, இந்த முதல் பயணமே, மேலும் அதிகமாக்கியது. ஐரோப்பாவைப் தொடர்ந்து, மகத்தான நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்த்தது தனக்கு எவ்வளவு பெரிய அனுபவமாக இருந்தது என்பதை, ஆச்சர்யம் ததும்பும் கண்களோடு ஒரு குழந்தையைப் போல விளக்குகிறார் மோலி.  மோலி தனது பயணங்களை மிகவும் தெளிவாகவே திட்டமிடுகிறார். குறிப்பாக வெளிநாடுகளுக்கு முன்பே திட்டமிடப்படாத திடீர் பயணங்களில் அவர் ஈடுபடுவதில்லை. இதன் காரணமாகத்தான், மளிகை கடை மற்றும் சில நகை சேமிப்புக்களை கொண்டு பத்து ஆண்டுகளாக, அவர் பயணித்து வருகிறார்.

  Also Read : லாரி ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட்.. கோடிகளில் கொட்டிய பணமழை! 

  நீங்கள் மோலி சேச்சி குறித்து படிக்கும் இந்த நொடி கூட, அவர் மனம் ஏதோ ஒரு நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை நினைத்துக் கொண்டு அங்கு செல்வதற்காக பணத்தை சேமித்துக் கொண்டிருக்கும்.
  Published by:Selvi M
  First published:

  Tags: Travel, Trending

  அடுத்த செய்தி