• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 25 கிலோவில் உலகின் மிகப்பெரிய லாலிபாப் தயாரித்து அசத்திய யூடியூபர் - வைரலாகும் வீடியோ!

25 கிலோவில் உலகின் மிகப்பெரிய லாலிபாப் தயாரித்து அசத்திய யூடியூபர் - வைரலாகும் வீடியோ!

உலகின் மிகப்பெரிய லாலிபாப்

உலகின் மிகப்பெரிய லாலிபாப்

லாலி பாப் பாகு கரைசலை பாணையில் ஊற்றி கெட்டியாகும் வரை ஆறவைக்கும் சுட்டிபாரா, பின்னர் பானையின் ஓடுகளை உடைத்துவிட்டு லாலி பாப்பை பார்வையாளர்களுக்கு காட்டுகிறார்.

  • Share this:
வில்லேஜ் புட் சேனலில் தயாரிக்கப்பட்ட 25 கிலோ எடையுடைய மிகப்பெரிய ’லாலிபாப்’ யூ டியூப் டிரெண்டிங் வீடியோவில் இடம்பிடித்துள்ளது.

அண்மைக்காலமாக யூடியூப்பில் உணவு சார்ந்த வீடியோக்கள் பெரும் கவனத்தை பெற்று வருகின்றன. வித்தியாசமான கன்டென்ட் மற்றும் நேர்த்தியான படப்பிடிப்புகளுடன் இருக்கும் வீடியோக்களை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். மக்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் வீடியோக்கள் டிரெண்டிங்கில் இடம்பிடிப்பதும் வழக்கம். அந்தவகையில் கேரளாவைச் சேர்ந்த வில்லேஜ் புட் சேனலின் லாலி பாப் வீடியோ யூடியூப் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

பெரோஸ் சுட்டிபாரா என்பவர் நடத்தி வரும் அந்த சேனலில் சுமார் 25 கிலோ எடையுடைய மிகப்பெரிய லாலிபாப்பை தயாரித்துள்ளனர். பள்ளி செல்லும்போது மிகச்சிறிய லாலி பாப்களை பார்த்திருப்போம். ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் விலையில் வாங்கி சுவைத்த பழக்கப்பட்ட பலருக்கும், 25 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட லாலி பாப், நிச்சயமாக வியப்பை ஏற்படுத்தும், வீடியோவின் தொடக்கத்தில் வழக்கம்போல் எல்லோரும் சாப்பிடும் மிகச்சிறிய லாலி பாப்பை காண்பிக்கும் பெரோஸ் சுட்டிப்பாரா, இதேபோல் மிகப்பெரிய லாலி பாப் ஒன்றை தயாரிக்க இருக்கிறோம் என கூறுகிறார்.



பசுமையான புல்வெளிகள் நிரம்பியிருக்கும் இடத்தில் இயற்கையாக அடுப்புகளை கூட்டி, பால், தண்ணீர் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு லாலி பாப்பை தயார் செய்கிறார். லாலி பாப் பாகு கரைசலை பாணையில் ஊற்றி கெட்டியாகும் வரை ஆறவைக்கும் சுட்டிபாரா, பின்னர் பானையின் ஓடுகளை உடைத்துவிட்டு லாலி பாப்பை பார்வையாளர்களுக்கு காட்டுகிறார். உண்மையிலேயே மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட அந்த லாலி பாப், பார்வையாளர்களை சுண்டி இழுக்கிறது. இந்த வீடியோ இதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. தொடர்ந்து வித்தியாசமான உணவுகளை தயாரித்து பதிவிட்டு வரும் சுட்டிப்பாராவின் யூடியூப் சேனலை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.



அண்மையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனல் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று சாதனை படைத்தது. தென் இந்திய யூடியூப் சேனல்களிலேயே முதன்முறையாக ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்றச் சேனல் என்ற பெருமையையும் பெற்றது. தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாகவும் அவர்கள் கொடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அசைவ உணவுகளை வகை வகையாக சமைக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல், தாங்கள் சமைத்த உணவுகளை ஏழை எளியோருக்கு மற்றும் ஆதரவற்றோருக்கு கொடுத்து உதவுகின்றனர். அவர்களின் நல்ல எண்ணத்துக்கும் உழைப்புக்கும் அங்கீகரமாக இந்த மாபெரும் உயரத்தை அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: